பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேவேந்திரன் 99 தேள்கெண்டை - தேவேந்திரன் tévendiran, பெ. (n.) தேவர்க ளுக்கு அரசன்; Indiran, the God of the celestials. "சிரபுரந் தேவேந்திரனூர்" (தேவா. +22) (செஅக.). தேவேந்திரன் தங்கம் teventiray-tarigam, பெ. (n.) தேவேந்திரனின் இருக்கையில் அமையப் பெற்ற 1008 மாற்றுப் பொன்; refined gold of 1008 matur or equivalent 2304 carats of pure gold (சா அக.). [தேவேந்திரன் + தங்கம்) தேவை ' t'vai, பெ. (n.) செயல்; affairs, business. "ஏவித் தேவை கொள்ளுதல்' (ஈடு, 8, 3, பிர) "தங்கள் தேவைகளுஞ் செய்யாதே" (சோழவமி. 65). 2. வற்புறுத்தல்; compelling need or necessity. “ஒரு தேவையிட்டிறே சொல்லிற்று" (ஈடு, 6, 10, 101,3. விருப்பம்; desire. "தேவையுனக் கின்னதென்று செப்பாய்" :தாயு, பராபர. 247/ 4. முடுக்கம் (யாழ் அக.); hasle. 5. அடிமைத் தனம்; slavery, bondage. “நீயுமுன் றேவைக் குரியைகாண்" (திவ். பெரியாழ். 148), 6. மகட் கொடுத்தவர் திருமணத்தின் பின் மணமகனை அழைத்துச் செய்யும் முதல் விருந்து (இ.வ.); first wedding feast held in the parent's house of a bride.) தேவை' tevai, பெ. (n.) இராமேசுவரம் பார்க்க; see ramesuvaram. "ஒரு தேவை வந்து பலதேவர் தாழுமிலக்குமணர் தண் புனலும் (தேவை/செஅக. தேவை ' tevai, பெ. (n.) கொள்ளுகை; getting. (தெவு – தேவு – தேவை] தள te/, பெ. (n.) கொடுக்காற கொட்டி வருத்தும் ஒருயிரி; scorpion. "தேட்கடுப்பன்ன நாட்படுதேறல்" (புறதா, 192, 16), தேளுக்குக் கொடுக்கிலே நஞ்சு, தேவடியாளுக்கு உடம்பிலே நஞ்சு, உனக்கோ உடம்பெல்லாம் நஞ்சு (பழ), தேளுக்கு மணியம் கொடுத்தால் நாழிகைக்கு முந்நூறு முறை கொட்டும். (பழ.) 2. நளி ஓரை (பிங்) (சிலப். 3123, உரை ); scorpio in thezodiac (சா அக). ம. தேள், தேரை; க. சேழ், தேழ்; தெ. தேலு; து. சேளு, தேளு; கு: .. தேளி; மா. தேலெ; பிரா. தேள்க் [துள் – (தென்) தேள் = குத்தும் நச்சுயிரி வகை (மு.தா. 180) வகை 1. கருந்தேள் 2.செந்தேள் 3. பார்ப்பாரத்தேள் 4. சிறு தேள் 5. அரசத் தேள் 6. உச்சிலிங்கத் தேள் 7. வாதத் தேள் 8. பித்தத் தேள் 9. சிலேட்டுமத் தேள் 10. மண்டலித் தேள் தேள்கடி tel-kadi), பெ. (n.) தேள் கொட்டு; the sting of scorpio (சா அக.). (தேள் + கடி) தேள்கல் telkal, பெ. {n.) ஒரு வகை நச்சுக்கல்; scropion stone on mineral bezoar (சா.அக.). தேள்கெண்டை tel-kcndai, பெ. (n.) ஒருவகைக் கெண்டை மீன்; scorpio goby. (தேள் + கெண்டை )