பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேறு 104 தேன் தேறு* ter-, பெ. (n.) கொட்டுகை; sting, as of a wasp. “கடுந்தே றுறுகிளை ” (பதிற்றுப். 71:6), [தெறு – தேறு] தேறு' teru, பெ. (n.) துண்டு ; piece. “கண்ட சருக்கரைத் தேற்றையும்” (மதுரைக். 532, உரை) (தெறி – தேறி – தேறு] தேறுகடை teru-kadai, பெ. (n.) தீர்மானம் (வின்.); decision, settlement. அவன் அவ்வாறு தேறுகடை பண்ணினான் (உ.வ. தெ. தேருகட: க. தேருகடெ [தேறு + கடை தேறுசூடு tiru-sudu, பெ. (n.) 1. மாடு முதலியன தேறுவதற்காகச் சூடிடுகை; branding cattleto promotc their faltening. 2. ஆடுமாடுகட்கு இடுஞ் சூடு; brand on cattle. [தேறு + சூடு தேறுதலை teru-talai, பெ. (n.) 1. துணிவு; courage, encouragement. 2. ஆறுதல்; comfort. "தேறுதலைச் சொல்வார் சிலரில்லை” (தனிப்பா). தேறுதி terudi, பெ. (n.) தேற்றாமரம் பார்க்க; see terra-maram (சா.அக), தேறுநர் tirunar, பெ. (n.) 1. கற்றோர் (வின்.); the learned. 2. நம்பத்தக்கவர் (வின்.); trustworthy persons. 3. சேர்ந்தோர் (யாழ். அக.); relatives. [தேறு – தேறுநர்) தேறுமுகம் telu-mugam, பெ. (n.) பற்றுக்கோடு; support, comfort. "தேறுமுகமின்றித் திரித்தேமையாள" (கந்தபு. தேவர்கள் போறி. 4) (தேறு + முகம்) தேறுவம் téruvam, பெ. (n.) பூனைக்காலி; cowiter plant (சா. அக.). தேறுவான் teruvan,பெ. (n.) சித்தரில் தேறியவர்; an expert scholar a chief amongst the Siddhars (சாஅக.). [தேறு – தேறுவான்) தேறை tetai, பெ. (n.) மீன்வகை (யாழ்அக.); a kind of fish. தேன் ten, பெ. (n.) 1. மது; honey. “பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயிறு ஊறியநீர்” (குறள், 17121) தேன் உள்ள இடத்தில் ஈ மொய்க்கும் (பழ.) 2. கள் (சூடா.); toddy. 3. இனிமை; sweetncss. “தேனுறை தமிழும்" (கல்லா. 9). தேனே போலும் செந்தமிழ்க் கல்வி (பழ.). 4. இனிப்புச் சாறு; sweet juice, "ஆலைவாய்க் கரும்பின் றேனும்" (கம்பரா. நாட் 9). 5. மணம் (சூடா .); fragrance, odour. "அகிற்புகையளைந்து தேனளாய்ட் பஞ்சுடை யமளிமேற் பள்ளி யேற்பவன்" (சூளா. குமர. 171. 6. வண்டு வகை (திவா .); a kind of beetle or bee. 7. பெண்வ ண்டு (சூடா .); a femalebectle or bee. "தேனோ டினவண்டுழு பூந்தெரியலாய்" (உபதேசகா, சூராதி. 4), 8. தேனிறால்; honeycomb. "தீந்தே னெடுப்பி” (ஐங்குறு, 272. ம, கோத. தேன்; க. தேனு, சேனு; தெ. தேனெ; து. தீய; குட. தேனி; துட. தோன்; கொலா., நா. தேனெ; பர், தீன்நெய்; கட. தீன், தீனு; மா, தெனி; பிரா. கனேன்; பட சேனு Pkt. tinisa [தெல் – தென் – தேன்) தேன் என்னும் சொல்லின் வேர்ப்பொருள் தெளிவு (தெளிந்தது) என்பதே. தேன் என்னும் சொல் தெளிவு என்னும் வேர்ப்பொருள் கொண்ட தென்சொல் லென்றும்; அது முறையே தேம் – தீம் -- தீவு எனத் திரியுமென்றும்; தீ என்னும் பகுதி இரட்டிக்குமிடத்துத் தித்தி என மருவிப் புணருமென்றும்; தமிழ்ச் சொற்களைத் தமிழடிப்படையாகவே ஆய்தல் வேண்டு மென்றும்; பண்டைத் தனித்தமிழ் நூல்களும் பல்லாயிரக்கணக்கான தென்சொற்களும் மறைந்து, இன்றுள்ள இலக்கண நூல்களும் விளங்காதவிடத்து, மொழித் திறத்தின் முட்டறுப்பது மொழிநூலேயென்றும்; கள், மது என்னும் சொற்கள் மயக்குவது என்பதை வேர்ப்பொருளாகக் கொண்ட தென் சொற்களென்றும்; தமிழே திரவிடமாகத் திரிந்துள்ளதென்றும்; வடமொழியில் வழங்குந் துணையானே ஒரு சொல் வடசொல்லாகிவிடாதென்றும்; தெற்றெனத் தெரிந்து கொள்க (குயில், 25.8.1959). வகைகள் 1. கொம்புத் தேன் 2. கொசுத்தேன் 3. பாகுத் தேன் 4. கதண்டுத் தேன்