பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேனலை 108 தேனிலுண்ணல் தேனலை tenalai, பெ. (n.) மரக்கலத்தைக் கடற்பரப்பிலுதைத்துச் செலுத்துதற்கேது வான கடலலை (மீனவ.); tides which helps the boat to go easily. [தேன் + அலை. தேன் = இனிமை, தேன் அவை = இனிமையாக அல்லது எளிமையாக (மரக்கலத்தைச் செலுத்த உதவும் அலை தேனவரை tenavarai, பெ. (n.) தேநவரை பார்க்க ; see tenavarai. (தேன் + நவரை, தேம் – தேன்) தேனழி-த்தல் tenali-, 4 செ.கு.வி. (v.j.) தேன் கூட்டைக் கலைத்துத் தேன் கொள்ளுதல்; to take honey from a bee-hive, driving away the bees. 'தேனிழைத்த என்றதனானே தேனழிக்க வருவாராலும்' (அகதா. 18, உரை) (தேன் + அழி-)) தேனன் tcnan, பெ. (n.) திருடன் (சூடா.); thief, robber. (ஏய் – ஏய்ப்பு = ஏமாற்றுகை. ஏய் – ஏயம் = தள்ளத்தக்கது. ஏயம் -- தேயம் = களவு. தேய – தேயன் — தேனன்) த. தேனன் – Skt. stena தேயம் பார்க்க தேனாயி tegayi, பெ. (n.) தேனீக்கள் போலுஞ் சேமிக்கும் பழக்கமுடையவர் (தஞ்சை.மீனவ); people who saves money like bees. தேனார்மொழியம்மை tensr-moliyammai, பெ. (n.) திருக்குடந்தைக்காரோணத்திலே கோயில் கொண்டிருக்கும் தேவியின் பெயர்; names of Goddess abode in Tirukkudandai temple. மது. தேன் — தேம் – தீம் – தீவு = இனிமை, தேன் – தேனி, தேனித்தல் = இனித்தல் (மு.தா. 145) தேனி (cpi, பெ. (n.) ஒரு மாவட்டத் தலைநகர்; district head-quarter. வையையாற்றின் துணையாறான தேனியாற்றின் கரையில் உள்ளதால் இப்பெயர் பெற்றது. தேனி' tepi, பெ (n.) 1. கடுரோகினி (மலை.); black hellcbore. 2, கொத்துமல்லி ; corriander (சாஅக.). தேனிகா teniga, பெ. (n.) தேனீ பார்க்க; see tigi (சாஅக.). தேனிகை tenigai, பெ. (n.) கொத்துமல்லி; corriander. | [தேனி' – தேனிகை) தேனிட்டகலவை tenitta-kalavai, பெ. (n.) பல மருந்துகள் சேர்ந்த கலப்பு மருந்தைத் தேனில் கூட்டிவைக்கை ; mixture of different medicines with purified honey (சா.அக.), [தேன் + இட்ட + கவவை] தேனிரும்பு ten-irumbu, பெ. (n.) உயர்ந்த இரும்பு ; superior iron. [தேன் + இரும்பு) தேனிலையான் tegilaiyan, பெ. (n.) தேனீ (யாழ்அ க.) பார்க்க ; see teni. [தேன் + நிலை + ஆன் தேனிலிட்ட மருந்து temilitta-marundu, பெ. (n.) தேனிலிட்டு வைத்த இஞ்சி முதலியன medicines or any drug preserved in honey as geenginger (சாஅக.). (தேனில் + இட்ட + மருந்து) தேனிலுண்ண ல் tenilunnal, பெ. (n.) நல்ல தேனில் மருந்தைக் குழைத்து உட் கொள்ளுகை; taking medicine steped in purified honey in the proportion of 1:8 (சா. அக.). [தேனில் + உண்ண ல், 'அல்' தொ.பொறு.] தேனி'-த்தல் teni, 4 செ.கு.வி. (v.i.) 1. இனித்தல்; to be sweet. 2. மகிழ்த ல்; to be happy. “கேசவன்பேரிட்டு நீங்க டேனித்திருமினோ" (திவ். பெரியாழ். 4, 6:1), (துல் – (தெல்) - தென் 7 (தெளிவு, கள்) இனிமை. தென் — தேன் = தெளிவு, கள்,