பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

111 தை தை' tai, பெ. (n.) த் என்ற மெய்யும் ஐ என்ற உயிரும் சேர்ந்த கூட்டெழுத்து; the syllable formed by adding the dipthong 'ai' to the consonant 't'. தை'-த்த ல் tai-, 4 செ.குன்றாவி. (v.t.) 1. தையலிடுதல் (சூடா.); to sew, stitch. 2. ஆணி முதலியன அடித்தல்; to nail, fasten beams with nails, spikes or pegs; to pin. "படத்திற்கு ஆணி தைத்தாயிற்றா", 3. இலை முதலியன குத்தியிணைத்தல்; to plait or stitch, as leaves into plate. 4. பொருத்துதல்; to join. “பலகை தைத்து" (பாரத, கிருட்டிண. 102). 5. முள் முதலியன ஊடுருவுதல்; to pierce penetrate, prick, as a thorn, an arrow. “மேனி தைத்த வேள்சரங்கள்” (கம்பரா. உலாவியல் 15.6. மாலை தொடுத்த ல்; to tie, weave, as a wreath. “தொடலை தைஇய மடவரன் மகளே" (ஐங்குறு. 36117. கோத்தல்; to string, as beads. “அவிரிழை முத்தந் தைஇய மின்னுமிழ் பிலங்க" (பதிற்றுப். 39, 15%8. ஒப்ப னை செய்தல்; to adorn, decorate. தைஇய மகளிர் (கலித். 27.1919. உருவாக்குதல்; to make, create. "வல்லவன் தை இய பாவைகொல்” (கலித். 561. 10. பதித்தல்; to set, enchase. “திகழொளி முத்தங் கரும்பாகத் தைஇ" (கலித், 80:41, 11. இடுதல்; to place, put, as a mark on the forehead, “திலகத் தைஇய தேங்கமழ் திருநுதல்" (திருமுருகு. 241, 12. உடுத்துதல்; to wear, put on "ஏர்தழை தைஇ" (கலித். 125:12) 13. சித்திரித்தல்; to paint. "அணிவரி தைஇயும்" (கலித். 76:21 14. சூழ்த ல்; to surround, cover, encircle. "சீர்மிகு முத்தந் தைஇய நார்முடி" (பதிற்றும், 19:61.15. வலைபின்னுதல் (வின்); to make a net. 16. அடைத்த ல் (யாழ்.அக.); to close, shut. [துள் - (தள்) — (தய்) + தை, தைத்தல் = துணி, பலகை முதலியவற்றை இணைத்தல் தை'-த்தல் tai-, 11 செகுவி (v.i.) 1. உள்நுழைதல்; to enter, dart. "அவ்வழித் தைத்தது பூதம்" (கம்பரா. திருவவ. 88). 2. மனத்திலுறைத்தல்; to pierce the mind; to rankle; to cause pain. "அவன் சொன்ன சொல் என் மனத்திற் றைத்தது" [துள் - (தன்) — (தய்) + தை.) தை' lai, பெ. (n.) 1, ஒப்ப னை ; decoration, embellishment. “தைபுனை மாது” (நிகண்டு ) 2. தையல் (தைலவ. தைல.); sewing. தை" tai, பெ. (n.) ஒரு தாளக்குறிப்பு (அரு.நி.); onom. expr. of beating time. தை' tai, பெ. (n.) 1. தமிழாண்டின் தொடக்க மாதம்; first month of Tamil era. 2. திருவள்ளுவராண்டின் தொடக்க மாதம் (இக்.வ.); first month of Thiruvalluvar era. புனர் பூசம், பூசம் என்னும் விண்மீன் பெயர்கள் புனர்தை, தை என்றிருத்தல் வேண்டும் என்றும் வரிசையில் அவை முன்பின்னாக இடம் மாறியுள்ளன என்றும் கணியர் இமு, சுப்பிரமணியனார் கூறுகிறார். புனர்தை என்பதிலுள்ள தையே மாதப் பெயராக விளங்குகின்றது. மாதங்கள் பற்றிய காலக் கணக்கீடு தமிழருடையதே. மாதங்களைப் பற்றி அறியுமுன் அவற்றிற்கு அடிப்படையான சிலவற்றைத் தெரிந்து கொள்ளுதல் மிகவும் இன்றியமையாததாகும். வானப் பெருவெளியில் கோள்களும் விண்மீன்களும் ஒரு நீள்வட்டப்பாதையில் முறையாகச் சுழன்று கொண்டிருக்கின்றன. விண்மீன்கள் எண்ணற்றனவாயினும், அவை இருபத்தேழு குழுக்களாகப் பிரிக்கப் பட்டுள்ளன. பொதுவாக ஒரு விண்மீன் என்று நாம் கருதுவது அல்லது குறிப்பிடுவது உண்மையில் ஒரு விண்மீன் குழுவேயாகும். இருபத்தேழு நாண்மீன்களும் அவற்றின் தோற்றத்தைக் கொண்டு ஒப்புமையாற் பெயர் பெற்றிருக்கின்றன. குதிரை போன்று காட்சியளிப்பது புரவி என்றும், அடுப்புப் போன்றே தோற்றமுடையது அடுப்பு என்றும் இவ்வாறே பிறவும் பெயர் பெற்றன. புரவி அஸ்வதி என்றும் அடுப்பு பரணி என்றும் வடசொல் வழக்குப் பெற்றுள்ளன. பிறவும் இத்தகையன. வானவெளியில் கிழக்கு மேற்காக அமைந்த நீள்வட்ட மண்டிலம் முந்நூற்றறுபது சிறுபிரிவுகளாகவும், முப்பது பாகைகள் கொண்ட பன்னிரு பெரும் பிரிவுகளாகவும்