பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொக்கம் 117 தொக்குத்தொக்கெனல் தொக்கம்’ tokkam, பெ. (n.) 1. வயிற்றுச் சிக்கல்; any hindrance to the passage of the contents of the stomach. 2. குழந்தைகள் மண் சாம்பல் முதலியவற்றை உட்கொள்வதால் உண்டாகும் குடற்சிக்கல், வயிற்றுப்பிசம், வயிற்றுப் போக்கு முதலியவற்றையுண்டாக்கும் ஒரு வகை நோய்; a discase in children marked by distension of stomach, diarrhoea etc., due to the hindrance to the passage of the intestinal contents and by their swallowing or eating whatever they come across with as mud, ash etc., (சா.அக). [தொங்கு – தொக்கு – தொக்கம். எலும்பு முதலியன செறியாமற்றொங்கிக் கொள்ளுதல் தொக்கம்' tokkam, பெ. (n.) வழக்கு; law-suit தொக்கக்காரன் (யாழ். அக.). தொக்கயம் tokkayam, பெ. (n.) கொடி' flag. தொக்கயங்க டொக்கெனவே சூறையிட்டு (மான்லிடு, 96). | தொக்கார் tokkar, பெ. (n.) 1. கூட்டத்தார்; assembly, company (w). 2. தோழர் (யாழ். அக.); friends, adherents. [தொக்கு' – தொக்கார் தொக்கி tokki, பெ. (n.) கடற்பச்சை (மலை.) UITH &#; sce kadarpaccai. தொக்கிடம் tokkidam, பெ. (n.). எண்ணெய் தேய்க்கை (யாழ் அசு.); inunction [தொக்கடம் – தொக்கிடம் தொக்கிந்திரியக்காட்சி tokkintiriya-k-katci, பெ. (n.) ஓர் அளவை; இது தொடுதலால் அறிவது; a measurement understood by touch, contact as with objects of sense. [தொக்கிந்திரியம் + காட்சி) தொக்கிநில்-தல் tokkinil-, 14 செ.கு.வி. (v.i.) {பேச்சில்; எழுத்தில் அல்லது முகக்குறியில் நேரடியாக வெளிப்படுத்தப்படாத கேள்வி, பொருள், உணர்வு போன்றவை) மறைந்து நிற்றல்; to implicit. யார் நீ என்ற வினா கதவைத் திறந்தவரின் முகத்தில் தொக்கி நின்றது. எங்கு போயிருந்தாய் என்ற அவருடைய வினாவில் சினம் தொக்கி நின்றது. [தொக்கு – தொக்கி + நில் தொக்கு' tokka, பெ. (n.) 1. பொருட்டின்மை (அற்பம்); small matter, trifle. அது தொக்காய்ப் போகாது (வின்.) 2. எளிமை; ease. சொத்துகளைத் தொக்கிலே அடித்துக் கொண்டு போனான். 3. இளப்பமானவன்; butt of ridicule. அவன்தான் எல்லார்க்குத் தொக்கு (இ.வ.). 4. நேர்மை ; attractiveness, neatness. "வரித்தோற் கச்சை தொக்காக வரிந்திறுக்கி” (குற்றா. குற. 29). தொக்கு' tokka, பெ (n.) துவையல் வகை (இவ); chutney, a kind of strong relish. LOITIŠISTUS தொக்கு, தக்காளித் தொக்கு. தொக்கு' tokku, பெ. {n.), தொடுவுணர்ச்சியறிவு; the sense of touch. “வாயுவிற் றொக்கு மூறெனும் விகாரமும்" (மணிமே. 27: 21522, உடம்புத் தோல் (சூடா .); skin, cuticle, surface of the body. “அரிணத் தொக்கு" (பாரத. இராச. 105). 3. மரப்பட்டை (தைலவ. தைல.); bark of a tree. 4. கனியின் தோல்; rind. “தொக்குக் கழிந்த சுளைபோலே" (ஈடு, 10, 7, 54 5. ஆடை ; cloth, raimcnt. 6, பற்று ; stake, material concern. அக்குத் தொக்கில்லாதவன் (செஅக). ம. தொக்கு தொக்கு fokku, பெ. (n.) ஐம்புலன்களில் ஒன்றான மெய்; one of the five scnse organs, skin (சா.அக), மறுவ. துவக்கு தொக்கு" tokku, பெ. (n.) நட்பு; friendship. தொக்குசை tokkusai, பெ. (n.) கல்லு பயிற்றங் கொடி: creeper of stone pulse (சா-அக). தொக்குத்தொக்கெனல் tokku-t-tokkenal, பெ. (n.) 1. ஈரடுக்கொலிக் குறிப்பு (யாழ். அக.); onom. expr. of creaking noise, as of shocs. 2. தள்ளாடற் குறிப்பு; expr. of rocking unsteady motion, as of a corpulent person in walking. தொக்குத்தொக்கென்று நடக்கிறான். [தொக்கு + தொக்கு + எனல்)