பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொகுதியொருமை 120) தொகை தொகுதியொருமை togudi-y-orumai, பெ (n.). குலத்தினை (சாதி) உணர்த்துதற்கு வரும் ஒருமை ; singular noun denoting a genus, class or group. " அதன் பொருள் என்பது தொகுதி யொருமை யாதலின்" (நன். 297, உரை! எறும்புப் புற்று, பாம்புப் பண்ணை [தொகுதி + ஒருமை) தொகு நிலைத்தொடர்மொழி togu-nilai-ttodar-moli, பெ. (n.) வேற்றுமையுருபு முதலியன நடுவே தொக்கு நிற்கச் சொற்கள் தொடர்ந்து வருவது; a phrasc, clausc or sentence of two words having ellipsis between thcm. [தொகுதிநிலை + தொடர்மொழி) தொகுப்பு' toguppu, பெ. {n.) 1. தொகை (வின்.); sum, total. 2. எல்லை ; boundary. 3. கூட்ட ம்; multitude, crowd. "தொகுப்புறு சிறுவர்" (அருட்பா, பிள்ளைப் பெரு. 32) [தொகு – தொகுப்பு) தொகுப்பு' toguppu, பெ. (n.) 1. ஒன்றாகத் தொகுக்கப்பட்டது அல்லது மொத்தமாகச் சேர்க்கப்பட்டது; தொகுதி; collection, compilation. பாவாணருடைய தொகுப்பில் பல அரிய நூல்களுள்ளன. தொகுப்பூதியப்பணியாளர் toguppuliya-ppaniyalar; பெ. (n.) ஒட்டுமொத்தச் சம்பளத்தில் பணியாற்றும் பணியாளர்; person appointed in consolidated pay. [தொகுப்பூதியம் + பணியாளர்) தொகுப்பூதியம் togupputiyam, பெ. (n.) அரகப் பணியில் சில வகைப் பணியாளருக்கு அடிப்படைச் சம்பளமோ அகவிலைப் படியோ இல்லாமல் மொத்தமாக வழங்கப் படும் மாதச் சம்பளம்; consolidated pay without the distinction of basic pay, allowance, etc. in govt. scrvices. (தொகுப்பு+ ஊதியம்) தொகுபு togubu, வி.எ. (adv.) கூடி; combine. [தொகுப்பு – தொகுபு] தொகுரு togurt), பெ (n.) துவர்ப்பு ; astringencc. துவர் – துகர் – துகரு – தொகரு – தொகுரு (கொ.வ.] துவர்ப்பு பார்க்க : see tuvarppu. தொகை !ogai, பெ. (n.) 1. கூட்ட ம்; assembly, collection, “உன்ன டியவர் தொகை நடுவே" (திருவாச, +4. 1), 2. சேர்க்கை ; association. "உயர்திணைத் தொகைவயின்" (தொல், சொல். 90, இளம்.). 3. விலங்கு முதலியவற்றின் திரள்; flock, herd, swarm, school. "புள்ளின் றொகையொப்ப” (4. வெ. 6, 2014. கொத்து; bunch, "தொகைப்பிச்சம்” (கம்பரா, எதிர்கோட் 75. மொத்தம்; sum, amount, total. 6. பணம்; property, stock, money. 7. எண்; number. "ஏயினாகிய வெண்ணி னிறுதியும், யாவயின் வரினுந் தொகையின் றியலா" (தொல் சொல் 292/ 8. கணக்கு ; calculation, account, measure. "தொகையி லன்பினால்" (கம்பரா. கிளைகண்டு. 102), 9, கூட்ட ல்; addition. 10. தொகுத்துக் கூறுகை (நன். 50); summary, epitome, substance of a narrative, abstract of a subject. II. தொகைச்சூத்திரம் பார்க்க; see logaj-ccuttiram, 12, உருபு முதலியன மறைகை; omission, as of an inflectional sign in combination of words. “ஈற்றுநின் றியலுந் தொகைவயிற் பிரிந்தே" (தொல், சொல், 78, இளம்பூ 13. வேற்றுமைத்தொகை, வினைத் தொகை, பண்புத்தொகை, உவமைத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித்தொகை என்று அறுவகையாய் ஒரு சொன்னீர்மைப் பட்ட தொடர்ச்சொல்; compound word of six kinds. "எல்லாத் தொகையு மொருசொன் னடைய" (தொல். சொல், 420). 14. ஆசிரியம் (திவா .); a class of verse. 15. நற்றிணை , குறுந்தொகை, ஐங்குறு நூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்னும் நூல்கள்; ancient anthologies, numbering eight. அது தொகைகளினுங் கீழ்க்கணக்கினும் இம்முறை மயங்கிவரக் கோத்தவாறு காண்க. (தொல். பொருள். 5, உரை), 16. ஐம்புலன்களின் கூட்டத்தாலாகிய ஆதன் (மணிமே. 30:192); the