பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொகைக்காரன் 121 தொகைநிலைச்செய்யுள் individual soul, as a product of aim-pulan. 17. புலவர் கழகம்; academy,"மதுரைத் தொகை யாக்கினானும்" (தேவா. 1797118. கலந்திருப்பதை இனம் இனமாகப் பிரித்தெடுக்கை (வின்.); assortment துல் – துள் – தொள் -- தொழு = மாட்டு மந்தை, தொழு – தொகு, ழ - க, போலித் திரிபு. ஒ.நோ. மழவு – மகவு, முழை – முகை. தொகு - தொகுப்பு = கூட்டம், தொகை, தொகு – தொகை (வே.க. 127-1301] ஐந்தும் அடக்கடக் கென்பர் அறிவிலார் ஐந்தும் அடக்குதற் கமரரும் அங்கிலை ஐந்தும் அடக்கிடில் அசேதனமாம் என்றிட்டு ஐந்து மடக்கி யமர்ந்திருந் தாரே (திருமந். தொகைக்காரன் togai-k-karan, பெ. (n.) செல்வ ன்; moneyed man; rich man. [தொகை + காரன் தொகைக்குடிநீர் togai-k-kudinir, பெ, (n.) சரக்குகளின் தொகையைக் கொண்டு பெயரிடப்பட்ட கருக்கு வகை ; a naine given to decoction according to the prescribed number of drugs. (தொகை + குடிநீர் தொகைக்குறிப்புச்சொல் togai-k-kurippu-ccol, பெ. (n.) குறிப்பினால் தொகை கொண்ட பொருளை உணர்த்தும் எண்ணுப்பெயர் (நன். 269); numeral noun suggesting the intended object by contest (தொகை + குறிப்பு + சொல்) தொகைகட்டு '-தல் togai-kattu-, 5 செ.கு.வி. (v.i.) 1. மொத்தமிடுதல்; to sum up; to make out the total; to cast up. 2. கணக்கு முடிவு செய்து பணம் கொடுத்தல்; to deliver up; to make over, as money; to pay, as into the treasury; to make a final payment (W). (தொகை + கட்டு-) தொகைகட்டு -தல் togai-kattu-, 5 செகுன்றாவி (v.t.) முடித்த ல் (W); to finish, conclude, bring to an end. [தொகை + கட்டு-] தொகைகாட்டு-தல் togai-kalnu, s செ.கு.வி. (v.i.) 1. கணக்கு ஒப்புவித்தல்; to give a written account. 2. கணக்கை மிகுதியாகக் காட்டுதல்; to make a sum appear large, to magnify. (தொகை + காட்டு-.] தொகைச்சூத்திரம் fogai-c-cuittiram, பெ. (n.) குறிப்பிட்ட செய்தியின் பகுப்பை எண்ணிட்டுக் காட்டும் நூற்பா (நன். 20); sutra cnumerating the classification of a topic. (தொகை + சூத்திரம் Skt. sitra – த. சூத்திரம் தொகைதை-த்தல் togai-tai-, 4 செ.கு.வி. (v.i.) கணக்கு முடித்தல் (இ.வ.); to cast up; to close an account [தொகை + தை-) தொகைநிலை togai-nilai, பெ. {n.) 1. திரளாக நிற்கை ; assembling, forming a class. 2. சுருங்கி நிற்கை (வின்.); contraction. 3. தொகைநிலைத் தொடர் (நன். 361) பார்க்க ; sec togainilai-k-tocar. 4. வென்ற வேந்தன் தன் படைகட்குச் சிறப்புச் செய்யுமாறு அதனை ஒருங்கு தொகுக்கும் உழிஞைத் துறை (தொல், பொருள். 68); theme of a victorious king bringing his armies together to honour them. S. போரில் இருதிறத்தாரும் ஒருங்கொழிந்ததைக் கூறும் புறத்துறை (பு. வெ. 7, 28); theme of the contending kings destroying each other on the battle field. 6. பகைவேந்தரெல்லாம் ஒருங்கு பணிதலைக் கூறும் புறத்துறை (பு. வெ. 6, 32); themc of the simultaneous surrender of hostile kings at the feet of a victorious king. 7. தொகைநிலைச் செய்யுள் பார்க்க; see logai-nilai-c-ceyyul. (தொகை + நிலை. தொகு – தொகை) தொகைநிலைச்செய்யுள் togai-nilai-c-ceyyul, பெ. (n.) ஒருவராலேனும் பலராலேனும் பாடப்பட்டனவாய்ப் பொருள் இடம் காலம் தொழில் என்பன பற்றியும் பாட்டு அளவு என்பன பற்றியும் ஒருங்கு திரட்டப்பட்ட செய்யுள் நூல் (தண்டி .4); anthology of poems collected on certain definite principles opp. to todar-nilai-c-ceyyul [தொகை + நிலை + செய்யுள்