பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொகையல் 123 தொங்கட்டம் பாலே வைத்தார், திருவாரூர்ப் பிறந்தார், முப்பொழுதுந் திருமேனி தீண்டுவார், முழுநீறு பூசிய முனிவர், அப்பாலுமடிச்சார்ந்தார். தொகையல்' togaiyal, பெ. (n.) துவையல் (உவ); chutney, a kind of strong relish. [துவையல் – தொவையல் (கொ.வ.] தொகையல்’ togaiyal, பெ. (n.) தொவச்சல் பார்க்க ; see tovaccal. தொகையாக்கு -தல் togai-y-aikku-, 8 செ.குன்றாவி. (V.1.) தொகைப்படுத்து-தல் (யாழ். அக.) பார்க்க ; see togai-p-paduttis, [தொகு – தொகை. தொகை + ஆக்கு-) தொகையிறக்கு-தல் togai-y-irakku-, 6 செ.குன்றாவி. (v.t.) 1. தொகைப்படுத்து-தல் (யாழ்.அக) பார்க்க; see togai-p-paduttu-. 2. சிறிது சிறிதாகக் கொடுத்துக் கடனைக் குறைத்தல் ; to lessen one's liability gradually, as by paying in instalments. [தொகு – தொகை. தொகை + இறக்கு-] தொகையுருவகம் togai-y-uruvagam, பெ. (n.) ஆகிய என்ற உருபு தொக்குவரும் உருவகம்; abbreviated metaphor, in which the word of correlation is understood மிக்கவுவமை விரியா துரையிற் றொக்கு நிற்பது தொகையுரு வகமே (வீரசோ . 159, உரை . (தொக்கு – தொகு – தொகை. தொகை + உருவகம்) (எ-டு) தாமரை வாண்முகத்துத் தண்டரளம் போன்முறுவல் காமரு வேய்புரைதோட் காரிகையீர்! தேமருவும் பூங்குழலின் வாசப் பொறைசுமந்து நேர்ந்ததோ பாங்குழலுந் தென்றற் பரிசு தொகையேற்று -தல் togai-y-&rur, 5 செ.குன்றாவி. (v.t.) 1. சிறுகச் சிறுகக் கொடுத்துக் கடனேற்றுதல்; to increase the debt by frequently lending small sums. 2. எண் கூட்டுதல்; to add up figures. 3. கணக்குப் பதிதல்; to post up accounts. [தொகை + ஏற்று தொகைவிரி togai-viri, பெ. {n.) நூல்யாப்பு நான்கனுள் விரித்துக் கூறியதனைத் தொகுத்தும் தொகுத்துக் கூறியதனை விரித்தும் கூறும் முறை (நன். 50); the method adopted in writing a treatise by summarising the facts elaborately treated by others and elaborating the facts briefly treated by them, one of four nul-yappu. [தொகு – தொகை. தொகை + விரி) தொகைவிரியுருவகம் togai-viri-y-uruvagam, பெ. (n.) ஆகிய, ஆக என்னும் உருவக உருபுச் சொற்கள் தொக்கும் விரிந்தும் நிற்பது (தண்டி 37); metaphor in which the words of correlation are understood or marked. அங்கை மலரு மடித்தளிருங் கண்வண்டும் கொங்கை முகிழுங் குழற்காரும் தங்கியதோர் மாதர்க் கொடியுளதா னண்பா! வதற்கெழுந்த காதற் குளதோ கரை தொகையுவமம் togai-y-uvamam, பெ. (n.) பொதுத்தன்மை வெளிப்பட்டு வாராமல் ஆராய்ந்துணரும்படி மறைந்து நிற்கும் உவமை (தண்டி , 30); a simile where the point of comparison is not brought out, but is implied, opp. to viri-y-uvamam. [தொக்கு - தொகு – தொகை. தொகை + உவமம்) வையத் தகளியாக வார்கடலே நெய்யாக வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய சுடராழி யானடிக்கே சூட்டினேன் சொன்மாலை இடராழி நீங்குகவே யென்று தொங்கட்டம் toigattam, பெ. (n.) 1. உடம்பின் ஓர் உறுப்பில் தொங்கும் பாகம், நஞ்சுக் கொடி முதலியன; that which is attached to or hanging in an organ as umbilical cord etc. 2. குடற்றொங்கட்டம்; measentary. [தொங்கு – தொங்கட்டம்