பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொங்கட்டான் தொங்கல் விடு-தல் தொங்கட்டான் toigattan, பெ. (n.) 1. தொங்கலாயுள்ள அணிவகை (j); any ornament that hangs; a pendant. 2. 2.6L.mws தளர்வாகக் கட்டுகை; a mode of tying cloth loosely.3. கடிகார எடை ; pendulam of a clock. [தொங்கு – தொங்கட்டம் - தொங்கட்டான்) DRESS தொங்கணி toigani, பெ. (n.) தொங்கலணி (வின்.); pendent ornament. [தொங்கு + அணி] தொங்கல் toigal, பெ. (n.) 1. தொங்குகை; hanging. "தொங்கல்வார் குழல்" (சீவக. 667) 2. தொங்கற்பொருள் (திருக்கோ .34, உரை ); anything pendent, hangings. 3. அணிகலத் தொங்க ல் (திவா.); pendent part of an ornament. 4. காதணிவகை (யாழ். அக.); an ear-ornament. 5. தொங்கவிட்டுள்ள ஆடை முந்தி (வின்); outer end of woman's cloth either hanging or brought round the neck; end of a man's cloth thrown over the shoulder. 6. அணியழகுப் பதாகைகள், தோரணங்கள்; decorative hangings, as of cloth; festoons. "தொங்கலுங் குடையும்" (கம்பரா. எழுச்சி. 78.7. பருத்த பூமாலை ; thick garland. "தோமரமாகத் தொங்கல் சிந்துபு மயங்கினாரே" (சீவக. 266. 8. ஐம்பாற் கூந்தலுள் ஒருவகை (பிங்); a mode of dressing woman's hair, one of aim-pal. 9. ஆண்ம க்களின் மயிர் (திவா.); man's hair. 10. மயிற்றோகை (திவா .); tail of a pea-cock. 11. மயிற்குஞ்சம் (பிங்.); pea-cock's feathers, as arranged for a fan or a parasol. 12. வெண் குடை (திவா .); white umbrella, as an emblem of royalty. "மாமதி தொங்கலாக" (திருப்பு: 871113. சேறாடி குடை சாமரம் முதலிய விருது; insignia of royalty. "கொற்றக் குடையும் வடிவுடைய தொங்கலுஞ் சூழ" (ஆதியுலா. 57) 14. பிணத்தை நீராட்டக் கொண்டு வரும் நீர்க்குடங்களின் மீது பிடிக்கப்படும் துணி; cloth spread above the water-pots while carrying water to wash a corpse. "சின்ன மூதத் தொங்கல் வந்திட" (சி. சி.2.95.15. வயிற்றுத் தங்க ல்; any undigested matter sticking to the bowels. 16. விழக்கூடிய நிலையில் ஒட்டி நிற்கை (யாழ்ப்); anything sticking and hanging ready to fall. 17. முனை ; projection, cape, headland. 18. மூலை ; street corner, end of a street, extremity. "தொங்கலுக்குத் தொங்கல் (வின்.) 19. பெண்களின் மேலாக்குச் சீலை (யாழ். அக); cloth worn as upper garment by women. 20. முந்துகை (யாழ். அக.); going in advance. 21. அணிகலன்களின் கடைப்பூட்டு (யாழ்அக.); clasp of an ornament. 22. குறை ; shortage. முப்பது உருவா தொங்கல், 23. களை கணின்மை (ஆதரவின்மை ); helplessness. அவர்பாடு தொங்கல் தான் (உ.வ). 24. ஒன்றைப் பற்றியிருக்குந் தன்மை ; dependence. ம. தொங்கல்; க. தொங்கல்; து. தொங்கெ, தொங்கெலு; பட தொங்கலு [தொங்கு – தொங்கல். 'அல்' தொ .பெ.சறு.] தொங்கல்கழிச்சல் toigal-kaliccal, பெ. (n.). குழந்தைகளுக்குண்டாகும் ஒருவகைக் கழிச்சல் நோய்; a kind of diarhea in childhood (சா. அக.). [தொங்கல் + கழிச்சல்] தொங்கல் போடு-தல் toigal-podu-, 20 செ.குன்றாவி. (v.t.) மேலாக்கிடுதல்; to wear a cloth as upper garment. [தொங்கல் + போடு-.) தொங்கல் விட்ட ம் toigal-vittam, பெ. (n.) ஒப்பனைக் குஞ்சம் (இவ); decorative hangings. [தொங்கல் + விட்டம்) தொங்கல் விடு'-தல் toigal-vidu-, 18 செ.குன்றாவி. (v.t.) தொங்கல்போடு-தல் பார்க்க; see toigalpodu-. [தொங்கல் + விடு-)