பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொட்டுப்பார்-த்தல் 1341 தொடக்கு தொட்டுப்பார்-த்தல் tottu-p-par, 4 செகுன்றாவி. (v.t.) கையாற் தொடல்; feeling by touch as in fever (சா. அக.). [தொட்டு + பார்.] தொட்டுப்பிடி'-த்தல் tottu-p-pidi-,4 செகுன்றாவி. (v.t.) பேறு காலத்தில் பக்கத்திலிருந்து உதவி செய்தல் (நாஞ்); to actasmidwife in childbirth. [தொட்டு + பிடி-) தொட்டுப்பிடி-த்தல் tottu-p-pidi ,4 செகுன்றாவி. (v.t.) சிறுவர் விளையாட்டு வகை; a kind of childcms game. [தொட்டு + பிடி-) தொட்டுப் போடு-தல் tottu-p-podu-, 20 செகுன்றாவி. (v.t.) மருந்தெண்ணெயைப் புண், காயம் முதலியவற்றுக்கிடுதல்; basmcaringor applying medicated oils or ointments to wounds, sores etc., (சா.அக.). தொட்பம் totpam, பெ. {n.) திறம் (அக.நி.); cleverness skill. ஒட்பம் – தொட்பம்] தொடக்கப்பள்ளி todakka-p-palli, பெ. (n.) ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை உள்ள பள்ளிக்கூடம்; primary school, clcmcntary school. ஆறகழூரிலுள்ள தொடக்கப் பள்ளியில் ஆயிரம் பேர் படிக்கின்றனர். [தொடக்கம் + பள்ளி) தொடக்கம் todakkam, பெ. (n.) 1. தோற்றம்; origin. 2. ஆதி (திவா.); beginning, commence ment. “ஊரது உண்டது என்றற் றொடக்கத்தன" (நன். 242. மயிலை .). 3. முயற்சி (வின்); means for an attempt. 4. செல்வ ம் (யாழ். அக.); wealth. 5. வகுப்பு, குலம் (யாழ் அக.); class. [தொடு + தொடங்கு + தொடக்கம் (மு.தா. க | தொடக்கறை topakkarai, பெ. (n.) உடல்; human body. "மும்மல பாண்டத் தொடக் கறையை" (தாடி பாயப்புலி. 18) [தொடக்கு' + அறை-) தொடக் கிழுப்பு todakkiluppu, பெ. (n.) தொடக்குவலிப்பு பார்க்க; see todakku-valippu (சா.அக.). [தொடக்கு + இழுப்பு) தொடக்கினி todakkini, பெ. (n.) கருவு; foetus in the womb (சாஅக.). (தொடக்கு – தொடக்கினி தொடக்கு'-தல் todakku-, 5 செ.குன்றாவி. (v.t.) 1. கட்டுதல்; to tie. 'நினைத் துன்பத்தாற் றொடக்கினேன்” (சீவக. 579). 2. அகப்படுத்துதல்; to catch hold of ensnare. “விளை பொருள் மங்கையர் முகத்தினும் . . . சொல்லினுந் தொடக்கும்” (கல்லா . 62, 28). 3. அணிதல்; to wcar, put on. 'பாதுகை திருவடி தொடக்கி' (விநாயகபு, 80, 2781, 4, பொருத்துதல்; to make to agree. க. தொடகு; தெ, தொடகு தொடக்கு'-தல் todakku-, 5 செ.குன்றாவி. (v.t.) சிக்கிக் கொள்ளுதல்; to get entangled, obstructed. "சங்கந்துங்க விலைக்கதவிப் புதன் மீது தொடக்கி” (பெரியபு. ஆனாய. 4). க. தொடகு தொடக்கு'-தல் todakku-, 5 செ.குன்றாவி. (v.t.) தொடங்குதல்; to begin. [தொடங்கு – தொடக்கு) தொடக்கு ' todakku, பெ. (n.) 1. கட்டு ; tying, binding, entanglcmcnt."படைச்சொற் பாசத் தொடக்குள் ளுறீஇ” (பெருங். மகத, 2, 13) 2. பிணைப்பு; bondage. "தொடக் கெலா மறுத்தநற் சோதி" (திருவாச. 37). 3. பற்று; connection, attachment. "தொடக்கறுத்தோர் சுற்றமே" (கம்பரா. சரபங். 27). 4. தீட்டு ; uncleanness, as of a woman in her periods or in childbirth, 5. குஞ்ச ம்; decorative hangings. *தொடக்கொடு தூக்கி" (சீவக. 13437, 6, தொடக்கு வடிவு (வின்) பார்க்க; see todakku-vadivu. ம. தொடக்கு [தொடக்கு - தொடக்கு']