பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொடர் 136 தொடர்ச்சிப்பண்ணு-தல் (குறள், 450). 7. உறவு (சூடா.); concction, relation. 8. கால்வழி; lineal succession. 9. பழைமை (யாழ்.அக.); long-standing connection. 10. பூமாலை (யாழ். அக.); flower garland. 11. நூல் (யாழ் அக.); thread. 12. பிசின் (யாழ். அக.); gum, glue. தொடர்' todar; பெ. (n.) 1. நாய்; dog. 2. கோவை; Indian caper. 3. குடற்றொடர்; that portion of the alimentary canal cithcr above or below the region of intestines (சா அக.). தொடர்' todar, பெ. (n.) குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒருமுறை எனத் தொடர்ந்து வருவது; seriol. மாதிகையில் வந்த கட்டுரைத் தொடர் முடிந்துவிட்டது. தொடர்* todar; பெ. (n.) வழக்குத் தொடுத்தல்; file a suit. எதிர்க்கட்சித் தலைவர் அமைச்சர் மீது இழப்பீட்டு வழக்குத் தொடர்ந்தார். தொடர் ஓட்டம் todar-ottam, பெ. (n.) 1. ஓட்ட த் தூரத்தின் நான்கில் ஒரு பகுதியை ஒருவர் கடந்த பிறகு தன் கையில் உள்ள கட்டையைத் தந்து மற்றவர் அந்த இடத்திலிருந்து ஓட்டத்தைத் தொடர்ந்து ஓடி நிறைவேற்றும் ஓட்டப் போட்டி; relay race. 4 x 4 மீட்டர் பெண்களுக்கான தொடர் ஓட்டம். 2. விளையாட்டுப் போட்டி, விழா முதலியன நடைபெறும் இடத்துக்கு ஒருவரைத் தொடர்ந்து ஒருவர் ஓடி ஒன்றைக் கொண்டு வருதல்; running in relays as in bringing the torch etc. சென்னையில் நடந்த பாவாணர் நூற்றாண்டு விழாவுக்கு அவர் பிறந்த ஊரான நெல்லையிலிருந்து ஒளிப்பந்தத்தைத் தொடர் ஓட்டமாகக் கொண்டு வந்தனர். [தொடர் + ஓட்டம் தொடர்கண்ணி todar-kanni, பெ. (n.). தொழுகண்ணி பார்க்க ; see tolu-kanni (சாஅக). தொடர்கதை todar-kadai, பெ. (n.) வார, மாத இதழ்களில் பகுதி பகுதியாகத் தொடர்ந்து வெளியிடப்படும் நீண்ட கதை; serial in periodicals. [தொடர்' + கதை] தொடர்குரு todar-gurz, பெ. {TI.) கொப்புளங்கள் நெருங்கத் தோன்றும் ஓர் அம்மை நோய் , confluent variola (சா.அக.), [தொடர் + குரு. குரு - கொப்புளம் தொடர் கோவை todar-kovai, பெ. (n.) 1. தொடரி (சங்கிலி); chain. 2. கட்டளை commanding word. 3. தொடர்; connection. 4. நூல்; thread. 5. பஞ்சு ; cotton thread. 6. பழைமை ; ancient. 7. பிசின்; paste. 8. பூமாலை ; garland. 9. மணம்; smell. 10. விலர்கு ; animal. (தொடர் + கோவை) தொடர்ச்சி todarcci, பெ. (n.) 1. தொடர்கை ; pursuit, following, continuance. 2. தொடர்பு ; association, connection, touch. Lorong uplafos றொடர்ச்சியினால்" (பெரியபு. சண்டேசு. 13). 3. உறவு முறை; relationship. 4. கொடிவழித் தொடர்பு : heriditary succession, lineal descent. 5. நட்பு; friendship, intimacy. 'தொல்குடியின் மாண்டார் தொடர்ச்சியும்" (திரிகடு 126. வரிசை; series, train, range, row, chain. “கருந்தேன் றொடர்ச்சியும்” (கல்லா. 26, 30)7. பூங்கொத்து (பிங்.); clustcr or bunch of flowers. 8. கரணிய கருமியப் பொருட்டு; chain of causes and effects. "தொடர்ச்சி . . . வித்து முளைதா ளென்றிந் நிகழ்ச்சியிலவற்றை நெல்லென வழங்குதல்" (மணிமே. 30:2001, 9. வழக்குத் தொடர்ச்சி (யாழ்.22); claim in a law-suit. 10. பேய் பிடிக்கை (வின்.); demoniacal possession. 11. தொடுசு (உவ); illicit connection, concubinage.12. முயற்சி (யாழ்அ க.); effort. (தொடு – தொடர் – தொடர்ச்சி) தொடர்ச்சிக்காரன் todarcci-k-kara), பெ. (n.). எடுத்துரைப்போன் (வாதி) (வின்.); claimant, prosecutor, plaintiff. [தொடர்ச்சி + காரன். 'காரன்' பெயாறு.) தொடர்ச்சிப்பண்ணு -தல் todarcci-p-pannu, 15 செ.கு.வி. (v.i.) வழக்கிடுதல் (வின்.); to prosecute in law, file a suit (தொடர்ச்சி + பண்ணு-)