பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொடர்வு 139 தொடரெழுத்து தொடர்வு todarvu, பெ. {n.) தொடர்ச்சி பார்க்க; see todarcci. "சுற்றிய சுற்றத் தொடர்வறுப்பான்" (திருவாச. 8, 2011 தொடர்வைப்பு todar-vaippu, பெ. (n.) தொடர்வைப்புக்கணக்கு பார்க்க; see todarvaippu-k-kanakku. [தொடர் + வைப்பு) தொடர்வைப்புக்கணக்கு todar-vaippu-kkanakku, பெ. (n.) வங்கி, அஞ்சல் நிலையம் முதலியவற்றில் குறிப்பிட்ட ஆண்டுகள் வரைத் திங்கள்தோறும் தொடர்ந்து ஒரு தொகையைச் சேமித்து வட்டியோடு திரும்பப் பெறுதல்; recurring deposit in a bank or post office, etc. [தொடர்வைப்பு + கணக்கு) தொடரர் todarar; பெ. (n.) மேவினர் (அக.நி); dependents. தொடரல் todaral, பெ. (n.) கடல் (அக நி); sea, [தொடு – தொடர் + அல் = தொடரல் தொடரா முறி todark-muri, பெ. (n.) விடுதலையாவணம் (யாழ்.அக.); deed of renunciation or relinquishment. 2. தொடர்முறி பார்க்க; see todar-mgi [தொடர் + ஆ + முறி. 'ஆ' எதிர்மறை இடைநிலை தொடரி' todari, பெ. (n.) 1. செடி வகை; a species of jujube. 2. முட்செடி வகை; a thorny straggling shurb. "கடுவுந் தான்றியுங் கொடுமுட் டொடரியும்" (பெருங். உஞ்சைக். 52, 38). 3. புலித்தொடக்கி; tiger stopper. [தொடு – தொடர் – தொடரி] தொடரி tocari, பெ. (n.) தொடர்வண்டி பார்க்க; sce todar-vandi. ம. தொடரி, கூரி தொடரி' todari, பெ. (n.) மாழை வளையத் தொடர்; chain. [தொடல் – தொடர் – தொடரி (வேக 237)] | தொடரிசைக்குறி todar-isai-k-kuri, பெ. (n.) சொல்லும் பொழுது இரண்டு மாத்திரைக் காலம் நிறுத்தும் பொருட்டு இடும் அரைப்புள்ளி (யாழ்ப்.); semi-colon. [தொடர் + இசை + குறி தொடரிடு-தல் todaridu-, 20 செ. குன்றாவி. (v.t.) இடைவிடாது செய்தல்; to work at continuously. "பாவிநான் தொடரிட்ட தொழில்க ளெல்லாம்" (தாயு. மலைவளர். 41 (தொடர் + இடு-) தொடரியம் todar-iyam, பெ. (n.) பொருள் முற்றுப்பெறுமாறு எழுவாய், பயனிலை ஆகியவற்றைக் கொண்ட சொற்கூட்டு; set of words completed in itself, containing subject and predicate. (தொடர் + இயம்) வாக்கியம் என்பது வடசொல் தொடரியல் todariyal, பெ. (n.) சொற்றொடர் அமைப்பின் விதிமுறைகளையும் சொற் றொடர்களுக்கிடையிலான உறவையும் விளக்கும் மொழியியற் பிரிவு; syntax (தொடர் + இயல்] தொடரெழுத்து todar-eluttu, பெ. (n.) அவனடித் தான், வந்தடித்தான் என்னுமிடங்களில் னகரமும் தகரமும் போல் நிலைமொழி யீற்றையும் வருமொழி முதலையும் தழுவி நிற்கும் எழுத்து (யாழ்அ க.); the letter formed by the combination of the final consonant or the final shortened'u' of a word and the initial