பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழின் தனித்தன்மையை ஆய்வு செய்வதற்கென்றே இறைவன் என்னைப் படைத்தா னென்று பறைசாற்றிக் கூறிய இப்பெருந்தகையின் பெயருக்குரிய வேர் விளக்கத்தைத் தேவநேயர் என்னும் உருப்படியிற் காணலாம். அப்பெருந்தகை வடித்தளித்த வழித் தடத்தில் செந்தமிழ்ச சொற்பிறப்பியல் பேரகரமுதலியின் அடுத்தடுத்த பகுதிகள் அணி வகுத்து வருகின்றன. அந்த வரிசையில் தெ முதல் தௌ வரையிலான இப்பகுதி வெளி வருவதற்குத் துணையாய் நின்றோர் பலர். அகரமுதலித் திட்டம் சிறப்பாகச் செயற்படவும், 6 தொகுதிகள் ஒருசேர வெளிவரவும் முழுமுதற் காரணமாய் விளங்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும் அப்பெருந்தகையின் தானைத் தளபதியாய் நின்றியங்கி வழி நடாத்திச் செல்லும் மாண்புமிகு கல்வியமைச்சர் செ. செம்மலை அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன். அகரமுதலித் திட்டத்திற்குப் பலவகையிலும் அறிவார்ந்த அறிவுரைகள் வழங்கிப் பணிகளை முடுக்கிவிட்ட எம்துறையின் செயலர் திருமிகு பு.ஏ. இராமையா இ.ஆ.ப., அவர்களுக்கும் அகரமுதலி மேற்பார்வையாளராகச் செயற்பட்டு ஒத்துழைப்பு நல்கிய உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் சா. கிருட்டினமூர்த்தி அவர்களுக்கும், கூர்ந்தாய்வுப் புலமையாளர்களான முனைவர் ந. அரணமுறுவல் மற்றும் புலவர் இறைக்குருவனார் ஆகியோர்க்கும் அயராதுழைத்த அகரமுதலித் திட்டத் தொகுப்பாளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை 15-10-2003 தா. சந்திரசேகரன்