பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொடைநடு 148 தொடையல் தொடைநடு todai-nadu, பெ. (n.) இரு தொடைகளுக்கும் இடைப்பட்ட இடை வெளி; space between the thighs (சாஅக.). [தொடை + நடு தொடைநடுங்கி todai-nadungi, பெ. (n.) மிக அஞ்சுபவன் (உ.வ.); extremely timid person, coward. (தொடை + நடுங்கி) தொடைநடுங்கு-தல் todai-nadungu-, செ.கு.வி, (v.i.) மிகவும் அஞ்சுதல்; feel timid. செயலாளருடன் பேச ஏன் தொடை நடுங்குகிறாய்? (தொடை + நடுங்கு) தொடைநரம்பு todai-narambu, பெ. (n.) தொடையின் பின்புறமுள்ள ஒரு பெரிய நரம்பு ; a big nerve that passes down the back of the thigh (சாஅக.). [தொடை + நரம்பு) தொடைநரம்புவாதம் todai-narambu-vadam, பெ. (n.) குளிர்ச்சியான உணவுகளை மிகுதியாக உண்பதால் உண்டாகும் ஊதை நோய்; a painful affection of the large nerve passing down the back of the thigh due to consuming cooling substances, scdentary habit etc., (சாஅக.). (தொடை + நரம்பு + வாதம் தொடைநாளம் todai-nalam, பெ. (n.) தொடையின் அரத்த நரம்பு (இங்.வை.); femoral vein. (தொடை + நாளம்) தொடைநிமிண்டு -தல் todai-nimindu-, 5 செ.குன்றாவி, (v.t.) 1. தொடையைக் கிள்ளுதல்; to pinch the thigh, as a punishment. 2. தூண்டி விடுதல் (உ.வ.); to stimulate. 3. நினைவுபடுத்தல்; to call onc's attention, remind, as by pinching. [தொடை + நிமிண்டு-.] தொடைநேர்ப்பேசி todai-nér-p-pesi, பெ. (n.) நீளப்போக்குள்ள தொடைச்சதை; straight muscle of the thigh (சாஅக.), தொடைப்பற்று todai-pa[[J, பெ. (n.) தொடையென்னுமுறுப்பு (உ.வ.); thigh. [தொடை + பற்று) தொடைப்பாடு todai-p-pidu, பெ. (n.) குடை, காலணி; appendage, as sandals, etc. [தொடு + பாடு தொடை முரண் todai-muran, பெ. (n.) LT C LITOOL; antithesis, in the first foot of a verse. “செம்மை பசுமை தொடை முரண்" (சீவக. 2, உரை [தொடை + முரண்) தொடையகராதி todai-y-agaridi, பெ. (n.) சதுரகராதிப் பிரிவினுள் எதுகையாக வருவதற்குரிய சொற்களைக் கூறும் அகரமுதலி; a section of Catur-agarati, being a dictionary of rhyming words. (தொடை + அகராதி) தொடையகற்றும் பேசி todai-y-agarrum-pesi, பெ. (n.) தொடையைக் கவர்ந்துள்ள நார்ப் பாகத்தை இறுகச் செய்யும் சதை; the muscle that tightens the fibrous shcath of the thigh (சாஅக.). தொடையடிகூழை todai-y-adi-kullai, பெ. (n.) தொடை முட்டுக்குக் கீழ்வாராமல் மயிரின்றியிருக்கும் வாலையுடைமையாகிய மாட்டுக் குற்றவகை (மாட்டுவா. 18); a defect of cattle which consists in having a short hairless tail. (தொடை + அடி + கூழை தொடையல்' todaiyal, பெ. (n.) 1. தொடர்ச்சி; succession, continuation. “நீள்விசித் தொடையல்" (பொருந.18). 2. கட்டுகை ; fastening, tying, weaving. “தொடையலங் கோதை" (சீவக.464) 3. தோளணி மாலை (பிங்); flower garlandworm over shoulders. 4, வாசிகை (திவா.) பார்க்க; see vasigai. s. தேன்கூடு; honey comb. "நெய்ம்முதிர் தொடையல் கீறி" (சீவக. 1198), [தொகு – தொடு + தொடை – தொடையல்)