பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொடையல் 149 தொண்டர் சீர்பரவுவார் தொடையல்2 todaiyal, பெ. {n.) அழிவு; ruin, destruction. "பையன் தொட்டது தொடையல் தான்'. [தொடை – தொடையல் தொடையானந்தம் todai-y-anandam, பெ. (n.) அளபெடைத் தொடைப்பாட்டினுள் பாட்டுடைத் தலைவனது பெயர்சார்த்தி அளபெடுப்பத்தொடுக்கும் குற்றம் (யாப்.வி. 522); use of alapedai before or after the name of a hero in a poem, considered as a defect. (தொடை + ஆனந்தம் தொடையெலும்பு todai-y-elumbu, பெ. (n.) தொடையிலுள்ள எலும்பு; thigh bone, femur. (தொடை + எலும்பு] தொடையெலும்புக்கவை todai-y-elumbu-kkavai, பெ. (n.) தொடைச்சந்து பொருத்து பார்க்க ; see todai-c-candu-poruttu (சா.அக.). [தொடை + எலும்பு + கவை) தொடைவாதம் todai-vedam, பெ. (n.) 1. தொடையில் ஏற்படும் ஊதை நோய்; painful affection of themuscles of thethigh. 2. அகவை முதிர்ச்சியால் தொடை நரம்பில் ஏற்படும் இழுப்பு நோய்; inflammation of the nerve of the thigh (சாஅக.). [தொடை + வாதம்) தொடைவாழை todai-valai, பெ. (n.) 1. அடித் தொடையிற் புறப்படும் வெள்ளை நோய்; abscess in the thigh or near the groin. 2. வீக்க க்கால்; milk leg, white leg, swelled leg. 3. மருந்துச் செடிவகை (யாழ்ப்); a plant, used in curing tumour. (தொடை + வாழை தொடைவில்லை todai-villai, பெ. (n.) சிறிய வட்ட த் தலையணை ; small round cushion (செஅக.). [தொடை + வில்லை) தொண்ட கம் tondagam, பெ. (n.) 1. குறிஞ்சி நிலப்ப றை (திவா .); a small drum used in kuriici tracts. "தொண்ட கச் சிறுபறைப் பாணி” (நற்./04), 2. ஆகோட்ப றை ; drum beaten while capturing the enemy's cows. "தொண்ட கப்பறை துடியொ டார்த்தெழ” (சீவக. 418) தொண்டகை tondagai, பெ. (n.) ஆதொண்டை ; thorny or ceylon on caper (சாஅக.). தொண்டச்சி tondacci, பெ. (n.) தொண்டி, பார்க்க ; see tondi': [தொண்டி – தொண்டித்தி – தொண்டிச்சி – தொண்டச்சி) தொண்டத்தி tondatti, பெ. (n.) பெண்மை நலப்பாடு நோக்கி வகுத்த நால்வகைப் பெண்டிருள் ஒரு பிரிவு: one of the four classes of women classified accroding to lust (சாஅக.). [தொண்டி – தொண்டித்தி – தொண்டத்தி தொண்டப்பறையன் tonda-p-paraiyan, பெ. (n.) வேளாண் முதலிய தொழில் செய்ப வன்; a sub-division of the paraiya caste which includes domestic servants. [தொண்டு + பறையன் தொண்ட ர்' tondar; பெ. (n.) 1. அடிமைகள்; slaves. 2. அடியார்; devotees, as slaves of God. "தொண்டர் குழாத் தொழுதேத்த வருள் செய்வானை" (தேவா. 228, 3). 3. உலகப் பற்றில் ஈடுபட்ட வர்; persons who are slaves to worldly pleasures. "எம்மானை யடைகிலாத் தொளை யிலாச் செவித் தொண்டர்” (தேவா. 429, 31 [துல் – துள் – தொள் – தொழு – தொழும்பு – தொண்டு – தொண்டர்) தொண்டர்' tondar, பெ. {n.) ஒரு கட்சியிலோ பொதுநல அமைப்பிலோ ஊதியமில்லாமல் பணி செய்ப வர்; worker in a party, volunteer in a service organization. தேர்தல் நேரத்தில் தொண்டர்கள் இல்லாவிட்டால் கட்சிக்கு வெற்றி வாய்ப்பே இல்லை (உ.வ.), தமிழியக்கத் தொண்டர்களைத் தளைப்படுத்தியது தகாது (உவ [தொண்டு - தொண்டர் தொண்டர்சீர்பரவுவார் tondar-cir-paravuvar, பெ. (n.) பெரிய புராணமியற்றிய ஆசிரியராம் சேக்கிழார்தம் பட்டப் பெயர்; the title given