பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொண்டிவாரம் 152 தொண்டு நிறுவனம் தொண்டிவாரம் tondi-varam, பெ. (n.) பயிரிடுங் குடியானவனுக்குரிய விளைச்சற் பகுதி; cultivation share in the produce. [தொண்டி + வாரம்) தொண்டீ ச்சுரம் tondi-c-curam, பெ. (n.) ஈரோட்டிலுள்ள திருக்கோயில்; a temple in Erodu, தொண்டீரன் tondiran, பெ. (II.) தொண்டை மான் (M.M. 908) பார்க்க ; see tondaimau. [தொண்டைமான் - தொண்டீரன் தொண்டு' tondu, பெ. (n.) 1. அடிமைத்தனம் (பிங்.); slavery. 2. கடவுள் வழிபாடு (சூடா.); devotedness to a deity; devoted service. “தொண்டு பூண்டு" (திவ்.திருமாலை, 5). 3. அடிமையாள்; slave, devoted servant. “தொண்டாயிரவர் தொகு, வே" (நாலடி, 224) 4. ஒழுக்கங்கெட்ட வன்-ள்; person of loose character. S. கொண்டித்தொழு; catlle pound. 6. ஒரு வகை உள்ளான் (வின்.); a kind of snipe. 7. தேங்காய் பலா முதலியவற்றின் மேற்றொலி (நாஞ்.); husk, as of coconut. 8. பூடுவகை (யாழ். அக.}; a plant க. தொள்ட்டு; தெ. தொட்டி (துல் – துள் – தொள் – தொழு – தொழும்பு – தொண்டு தொண்டு? fondu, பெ. (n.) பழைமை (திவா.); antiquity, old times, former times. "தொண்டு போல வெவ்வுலகமுந் தோன்றுதல் வேண்டும்" (விநாயகபு, 82, 55 (தொல் - தொள் - தொண் – தொண்டு) தொண்டு ' tondu, பெ. (n.) ஒன்பது: nine. "தொண்டுபடு திவவின்” (மலையடு 211 தொண்டு தலையிட்ட பத்துக்குறை யெழுநூற் றொன்பஃ தென்ப வுணர்ந்திசி னோரே" (தொல். பொருள். +13). [தொள் + து – தொண்டு) ஒன்பதிற்கு முதலாவது வழங்கின பெயர் தொண்டு என்பது. தொண்டு + பத்து = தொண்பது - தொன்பது - ஒன்பது. தொண்பது முதலில் 90 என்னும் எண்ணைக் குறித்தது. அறுபது, எழுபது, எண்பது என்னும் பிற பத்தாம் இட எண்ணுப் பெயர்களுடன், தொன்பது என்பதை ஒப்பு நோக்குக (ஒ.மொ . 66), ஒன்பது என்னும் பெயருக்கு, ஒன்று குறைந்த பத்து என்று பொருள் கூறுவது பொருந்தப் புகலல் என்னும் உத்தி பற்றியது. இக்கூற்றிற்கு உருதுவிலும் இந்தியிலும் உள்ள, உன்னீஸ் (19), உன்தீஸ் (29), உன்சாலிஸ் (39), உன்சாஸ் (49), உன்சட் (59), உன்த்த ர் (69), உன்யாசி (79} என்னும் எண்ணுப் பெயர்கள் ஒருகால் சான்றாகலாம். ஆனால், அங்கும், அப்பெயர்கள் ஒழுங்கற்ற முறையில மைந்தவையென்பதை, நவாசீ (89), நின்னா நபே (99) என்னும் பெயர்களாளறியலாம் (ஓ.மொமீ8). | தொண்டு ' tondu, பெ. (n.) 1. ஒடுக்கவழி; gap, narrow passage. 2. உருவு சுருக்கு (அகநி.); snare, noose. 3. வேலிகளைத் தாண்டாதிருக்க மாட்டின் கழுத்தில் கட்டித் தொங்கவிடப் பட்டிருக்குங் கட்டை ; block of wood suspended from the neck of an animal to prevent it from passing through hedges. ம. தொண்டு; க. தொண்டி தொண்டு" tondu, பெ. (n.) தன்னலம் கருதாமல், எதையும் எதிர்பாராமல் ஒன்றின் நன்மைக்காகவும் வளர்ச்சிக்காகவும் செய்யும் பணி; service. நாட்டுப்புற மக்களுக்குத் தொண்டு செய்ய மருத்துவர்கள் முன்வர வேண்டும் (உ.வ. பாவாணர் தமிழ்மொழி மீட்புக்குச் செய்த தொண்டு அளப்பரிதாகும் (உ.வ. [துல் – துள் – தொள் – தொழு – தொழும்பு – தொண்டு) தொண்டு கிழவன் tondu-kilavan, பெ. (n.) முதிர்ந்த கிழவன்; ripe, oldman. தொண்டுகிழவ னிவனாரென” (திருப்பு. 59) [தொண்டு + கிழவன்) தொண்டுதுரவு tongu-turawl, பெ. {n.) 1. பணி விடை | service.2. உளவு; movements, concerns, affairs of a person, as watched, by a theif or spy. (தொண்டு + துரவு] தொண்டு நிறுவனம் tondu-niruvanam, பெ. (n.) ஒன்றின் நன்மைக்காக அல்லது வளர்ச்சிக்காகப் பணியாற்றும் அமைப்பு: service organization or society, voluntary