பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தெறிப்பு தெறு-த்தல் தெறிவாதம் teri-vadam, பெ. (n.) நோய் வகை; a discasc. | தெறிவில் tcri-vil, பெ. (n.) சுண்டு வில்; a small bow for shooting pellets. "சுரிகையுந் தெரிவில்லுஞ் செண்டுகோலும்" (திவ், பெரியாழ். ம. தெறிவில்லு தெறி' + வில்) a தெறிப்பு' terippu, பெ. (n.) செறுக்கு மேலிட்ட ஒழுக்கம்; presumptuous conduct. தெறிப்பு tenippu, பெ (n.) கடைப் பூட்டு (வின்); button, clasp of thread or metal. ம. தெறிப்பு [தெறி – தெறிப்பு) தெறிப்பு' terippu, பெ. (n.) தெறித்துப் போதல்; break caused abniptly (சா அக.) (தெற்று - தெறி – தெறிப்பு! தெறிப்பு terippu, பெ (n.) அதிர் வெடி; rocket. (தெறி – தெறிப்பு) தெறிப்புநாடி terippu-nadi, பெ. (n.) 1. துள்ளு நாடி; swift abrupt pulse. 2. பின்னுக்கு உதைத்தோடும் நாடி; rebounding pulse (சா.அக.). (தெறிப்பு' + நாடி) தெறிப்புமசகு terippu-masagu, பெ. (TI.) மசகுப் பொருள்களை வாரித் தெறித்து மசகிடும் முறை ; splash lubrication. (தெறிப்பு + மசகு] தெறி பட்ட வள் teri-pat{ava!, பெ. (n.) தெறித்தவள் பார்க்க; scc terittaval. (தெறித்தவள் – தெறிபட்டவள்] தெறிபடு -தல் teri-padu, 20 செ கு.வி. {v.i.) 1. சிதறுண்ணுதல்; to be scattered, as cattle. 2. அலைந்துலைதல்; to be tossed about, as a vessel at sea. 3. தோற்றோடுதல்; to be discomfited, routed, as an army. 4. கலங்குதல், to be puzzled, confounded. 5. திக்க றுதல் (வின்); to be desolate, forsaken. 6. தவறுதல்; to fail, come to naught. 'செயல் தெறிபட்டது', (தெறி + படு-.] தெறி பதம் teri-padam, பெ. (n.) நெய்மம் காய்ச்சுகையில் எண்ணெய் வெடிபடும் நிலை; spirtling stage of medicinal oil when boiling. (தெறி + பதம்) தெறிமுற்று -தல் teri-muru-, 5 செ.கு.வி. (v.i.) முழுதும் பழுத்தல் (இ.வ)); to becomefully ripe. (தெறிக்க + முற்று-] தெறு'-தல் tery-, 6 செகுன்றாவி. (V.1.} 1. சுடுதல்; to burn, scorch. "நீங்கிற் றெறூஉம்” (குறள், 704) 2. தண்டஞ்செய்தல்; to punish. "கொடியோர்த் தெறுதலும்” (புறநா. 29), 3. அழித்த ல்; to destroy. "பெரிதாய பகை வென்று பேணாரைத் தெறுதலும்" (கலித். 11), 4. கொல்லுதல் (பிங்.); to kill."முள்ளி னெய்தெற விழுக்கிய” (மலைபடு. 301) S. வருத்துதல்; to trouble,plague. “செம்முக மாத்தெறு கட்டழிய" (திருக்கோ . 313). 6. நெரித்த ல் (திவா .); to crush, bruise. 7. காய்ச்சுதல்; to boil down. "கரும்பினைத் தெற்ற கட்டியின்" (காசிக இல்ல.3). 8. சினத்தல்; to be angry at or with. “தெறலருங் கடுந்துப்பின்" (மதுரைக், 32, 9, கொட்டுதல்; to sting, as a wasp. "கடிதாகத் தெறுதலை யுடைய மிக்க குளவியினம் (பதிற்றுப். 71, உரை), 10. மிகுத்தல் (பிங்); to increase. தெறு-தல் tery-, 6 செ.கு.வி (v.i.) 1. தங்குதல்; to tarry. 2. நீங்குதல்; to leave, forsake. *பொய்ம்மை தெறுவது” (திருநூற். 13). தெறு'-த்தல் teru-, 11 செ.குன்றாவி. (v.t.) 1. நெரித்த ல் (பிங்.); to crush, bruise.