பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தென்றி 46 தென்னங்காடி காமவிருப்பை மிகுவிக்கும் தென்றலைத் தேராகக் கொண்டிருப்பதால் காமனுக்கு இப்பெயரமைந்தது. தென்றி tenri, பெ (n.) 1. தெற்கு; south. “தென்றிக் கயிலையிலே" (காளத், உலா, 91 2. தென்றல் பார்க்க; see tenral."தென்றியா யசைந்து” (கந்த திருவவ. (தென் - தென்றி] தென்றிசைக் கிழவன் tenrisai-k-kilavan, பெ. (n.) தென்றிசைமுதல்வன் பார்க்க; tennisaimudalvan. | [தென் + திசை + கிழவன்] தென்றிசைக்கோன் tegrisai-k-kon, பெ. {n.} தென்றிசைமுதல்வன் பார்க்க; tennisaimudalvan. (தென் + திசை + கோன்] தென்றிசைப்பாலன் tenrisai-p-palan, பெ. (n.) தென்றிசைமுதல்வன் பார்க்க; sce tenrisaimudalvan (தென் + திசை + பாலன் தென்றிசைமுதல்வன் tenrisai-mudalval, பெ. (n.) தென்திசையின் தலைவனான கூற்றுவன் (திவா.); Yaman as regent of the south. ம. தென்னல்; க. தெம்பரல், தென்காலி, தம்பெலர்; தெ. தெம்மா (காற்று) மூழ்கிப்போன குமரிக்கண்டம் தென்றிசை யிலிருந்ததாலும் தென்புலத்தார் என்பது நீத்தாரைக் குறிப்பதாலும், தென் திசைக்கு உரிய தலைவனாக, கூற்றுவன் கருதப் பட்டான். [தென் + திசை + முதல்வன்) தென்றிசையங்கி tenrisai-y-aigi, பெ. (n.) உயிர்களைக்கொன்று கடவுளுக்கு உணவளிக்கும் வேள்வித் தீ; one of the three sacred fires of vedic sacrifice. (தென் + திசை + அங்கி) தென்று-தல் tenni-,s செகுவி. (v.i.) 1. சிதறுதல்; to be scattered, split to pieces. "ஆயிரந்தோளுந் திருச்சக்கரமதனாற் றென்றித் திசை திசைவீழ" (திவ். பெரியாழ். 5-39). 2. இனம்பிரிதல்; to stray away, as from a group. *தென்றியிருளிற் றிகைத்த கரி" (தேவா . 150, 5 ம. தென்னுக (தெறி – தெற்று – தென்று] தென்ன கர் ten-nagar, பெ. (n.) கூற்றுவன் நகரம் (தெற்கிலுள்ள து); Yaman capital, as being in the south. "தென்னகர்க்கிறை சென்றனன்" (உபதேசகா. சிவபுண். 227/ ம. தென்னகர் (தென் + நகர் தென்ன ங்கட்டை ' temparigattai, பெ. (n.) பனங்கட்டை போன்று தென்னை மரத்திலிருந்து அறுத்து எடுக்கப்பட்ட LOL; log of wood obtained by cutting, coconut tree. (தென்னை + கட்டை ! இவை கைமரங்களாகப் பயன்படுத்தப் படுகின்றன. தென்ன ங்கட்டை2 tennaigattai, பெ. {n.) தேய்ந்த தென்னம் விளக்குமாறு; wormout broom of coconut leaf fibre. (தென்னை + கட்டை, கட்டை = தேய்ந்தது, குட்டையானது) தென்ன ங்கருப்பநீர் tennai-karuppa-nir, பெ. (n.) தென்னையின் பதநீர் (வின்.); sweet coconut-toddy. (தென்னை + கருப்ப நீர்) தென்னங்கள் tennai-kal, பெ. (n.) தென்னம் பாளையிலிருந்து வடிக்குங் கள்; coconut toddy. ம. தெங்கின் கள்ளு (தென்னை + கள் தென்ன ங்கன்று tennai-kanru, பெ. (n.) தென்னம்பிள்ளை பார்க்க ; see tennam-pillai. (தென்னை + கன்று ) தென்னங்காடி tennai-gadi, பெ. (n.) தென்னங் கள்ளைப் புளிக்க வைத்து அதனின்று வடிக்கப்படும் சாறு; coconut vinigar (சாஅக). (தென்னை + காடி) நெல்லுமியைப் பயன்படுத்தி விரைந்து புளிக்க வைக்கலாம். இக்காடி ஊறுகாய்க் குதவும். தாகத்தைத் தணிக்கும்.