பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேங்காய்க்கூடு S6 தேங்காய்த்துருவல் தேங்காய்க்கூடு tengay-k-kidu, பெ. {n.) தேங்காய்கள் இட்டுவைத்திருக்கும் சிறு கொட்ட கை (நாஞ்.); a shed whcrecoconuts are stored. ம. தேங்கக்கூடு (தேங்காய் + கூடு) தேங்காய்க்கொப்பரை teligay-k-kopparai, பெ. (n.) உலர்ந்த தேங்காய்; dried kermal of coconut (சாஅக.). | [தேங்காய் + கொப்பரை தேங்காய்க்கோம்பை tengay-k-kombai, பெ. (n.) தென்னங்கோம்பை பார்க்க; sce tennańkombai (தேங்காய் + கோம்பை) தேங்காய்கட்டியடி-த்தல் tengay-katti-y-adi', 4 செ.குன்றாவி. (v.t.) தொந்தரவு செய்தல்; to give trouble, to vex, worry. [தேங்காய் + கட்டி + அடி) தேங்காய்ச்ச தை terigai-c-cadai, பெ. (n.) தேங்காயினுட் சதைப்பற்று; kernal of coconut (சாஅக.). [தேங்காய் + சதை) தேங்காய்ச்சிண்டு teigey-c-cindu, பெ. (n.) தேங்காய்க்குடுமி பார்க்க; see tengay-k-kucumi. (தேங்காய் + சிண்டு) தேங்காய்ச்சிரட்டை tcigay-c-cirattai, பெ. {n.) கொட்ட ங்க ச்சி; half of a coconut shell. ம. சிரட்ட க. கரட; குட. செரடெ பட. கரட்டலு [தேங்காய் + சிரட்டை) தேங்காய்ச்சில் tchgay-c-cil, பெ. (n.) 1. தேங்காய்ப் பருப்பின் கூறு; a piece of coconut albumen with or without the shell. 2. கொட்ட ங் கச்சிக் கூறு; a picce of coconut shell. (தேங்காய் + சில்) தேங்காய்ச்சுடு - தல் teigay-c-cudy-, 4 செ.குன்றாவி. (v.t.) தேங்காயைக் கண் வழியாகத் துளைத்து வெல்லம், கடலை, அரிசி, வறுத்த எள் முதலானவற்றை உள்ளே நிறைத்தடைத்து நிலத்தில் புதைத்து அவ்விடத்தில் தீமூட்டி வேகவைத்தல்; to cook the coconut by kiln method, with somc edibles. (தேங்காய் + சுடு) தேங்காய்ச்சொட்டு teigay-c-cottu, பெ. (n.) தேங்காய்ப் பருப்பின் துண்டு (வின்); slice or thin piece of coconut albumcn. [தேங்காய் + சொட்டு தேங்காய்த்த ட்டு terigay-t-tattu, பெ. (n.) கப்பலின் பின்பக்கத்து மேற்றட்டு; poopdeck (தேங்காய் + தட்டு) தேங்காய்த்த ண்ணீ ர் tengai-t-tannir; பெ. (n.) 1. இளநீர்; the sweet astringent fluid of tender coconut. 2. முற்றிய தேங்காயின் தண்ணீ ர், swect watcr of the riped coconut (சா.அக.). (தேங்காய் + தண்ணீர்) தேங்காய்த்த லையன் teigay-t-talaiyal, பெ. (n.) தேங்காயைப் போன்ற தலையுடையோன்; one having a big head like coconut (சா.அக.). (தேங்காய் + தலையன்) தேங்காய்த்திருகல் tengay-t-tirugal, பெ. (n.) தேங்காய்த்துருவல் பார்க்க; see lcigay-t-turuval (சா.அக.). [தேங்காய் + திருகல்) தேங்காய்த்திருகி teigay-t-tirugi, பெ. (n.) தேங்காய்த்துருவி பார்க்க; see tcigay-t-turuvi. [தேங்காய் + திருகி) தேங்காய்த்துண்டு teigay-l-lundu, பெ. (n.) தேங்காய்க்கீ ற்று பார்க்க; see tengiy-k-kiru (தேங்காய் + துண்டு) தேங்காய்த்தும்பு teigay-t-tumbu, பெ. (n.) தேங்காய் நார்க் கயிறு (யாழ்ப்.); thread made by fibres of the coconut-husk. (தேங்காய் + தும்பு) தேங்காய்த்துருவல் tengay-t-turuval, பெ. (n.) தேங்காய்ப் பருப்பின் துருவிய பூ; coconut scrapings (சா.அக.). [தேங்காய் + துருவல்