பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேசியப்பறவை தேட்கொட்டு national anthem. விழாமுடிவில் தேசியப்பண் இசைக்கப்பட்டது. மறுவ. நாட்டுப்பண் [தேசம் – தேசியம் + பண்) தேசியப்பறவை tesiya-p-paravai, பெ. (n.) ஒரு நாட்டுக்குரியதாக அறிவிக்கப்படும் பறவை; national bird. மயில் நமது நாட்டின் தேசியப் பறவை. [தேசம் – தேசியம் + பறவை) தேசியம் te.siyam, பெ. {n.) 1. நாட்டின் முழுமையையும் ஒற்றுமையையும் நோக்கமாகவுடைய போக்கு; nationalism. முன்னைப் பிரிவினைக்காரர்கள் இன்று தேசியம் பேசுகின்றனர், 2. ஓர் இனமக்கள் தங்கள் தனித்துவத்தை வலியுறுத்தி அரசியலில் தனியுரிமைகோரும் போக்கு; nationalism advocated by ethnic groups. 3. நாடு முழுவதற்கும் உரியது அல்லது நாடு முழுவதையும் சார்ந்த து; that which belongs to the nation. தேசியக்கொடி, தேசியப்பண். (தேசம் – தேசியம்) தேசியமலர் tesiya-malar; பெ. (n.) ஒரு நாட்டிற்குரியதாக அறிவிக்கப்படும் பூ: national flower. தாமரைப்பூ நமது நாட்டின் தேசிய மலர். [தேசம் – தேசியம் + மலர்) தேசியமாணவர்ப்ப டை tesiya-manavar-ppadai, பெ. (n.) படைப்பயிற்சி பெறும் மாணவ இளைஞர் படை ; national cadet corps (NCC). (தேசியம் + மாணவர் + படை] தேசியவியக்கம் tesiya-v-iyakkam, பெ. (n.) நாட்டின் நலன் கருதி இயங்கும் இயக்கம்; national movement. மொழிவளர்ச்சிக்குத் தேசியவியக்கம் தேவை. [தேசம் – தேசியம் + இயக்கம் தேசியவிலங்கு tesiya-vilaigu, பெ. (n.) ஒரு நாட்டுக்குரியதாக அறிவிக்கப்படும் விலங்கு; national animal. புலி நமது நாட்டின் தேசிய விலங்கு. [தேசம் – தேசியம் + விலங்கு) தேசு tisu, பெ. (n.) 1. ஒளி; bright. 2. பொன்; gold. 3. அழகு; beauty. "திருமா மணிவண்ண ன் தேசு" (திவ். இயற். 3:9), 4. புகழ்; fame. "நும்முடைத் திருவுந் தேசும்" (சீவக. 7711.5. அறிவு (ஞானம்); knowledgc. “தேசுறு முண்பார்க் கென்றே தேறு (சைவச. பொது. 561), 6. பெருமை; proud. “வலிச்சினமு மானமுந் தேசும்" (பு.வெ. 2:41, 7. வீரியம் (வின்.); energy. த. தேசு; வ. தேஜஸ் [தேய் – தேயு – தேசு) தேசுகொள் fesukol, பெ.எ. (adj.) புகழாகிய ஒளியைக் கொண்டுள்ள; live so gloriously with fame. “செழியரைத் தேசுகொள் ஸ்ரீ கோராஜ கேஸரிவர்மரான ஸ்ரீராஜராஜ தேவர்க்கு " (தெ.க.தொ . 3:1, 4), [தேசு + கொள்) தேட்கடி tet-kadi, பெ. (m.) தேட்கொட்டு பார்க்க; see tet-kotha (தேள் + கடி தேட்கடை' tet-kacai, பெ. (n.) 1. குருகு விண்மீ ன் (மூலம்) (பிங்.); 19th naksatra. 2. பூடு வகை (மூ.அ.); a medicinal plant, (தேள் + கடை] தேட்க டைப்பூண் tet-kadai-p-pin, பெ. {n.) தேட்கொடுக்கி பார்க்க; sce ter-kochukki (சாஅக), தேட்குமச்சி ter-kumacci, பெ. (n.) தேக்குடிச்சி பார்க்க ; sce tek-kudicci(தமி.சொ அசு), தேட்கெண்டை tet-kendai, பெ. (n.) ஐந்து விரல நீளம் வளரும் கடல்மீன் வகை (யாழ்.அக.); sea-fish, olive, attaining 5 inch in length. [தேன் + கெண்டை ] தேட்கொட்டான் tet-kollan, பெ. (n.) பனையிலையிலுள்ளதும் தீண்டினால் தேள்நஞ்சுபோற் கடுப்பை உண்டாக்குவது மான பூச்சிவகை (இ.வ); a green insect whose touch produces the same sensation as scorpion - sting found on palmyra leaves. (தேள் + கொட்டான்) தேட்கொட்டு ter-kottu, பெ. {n.) கொடுக்கு முனையால் தேள் குத்துகை; stinging of a scorpion thrust of a scorpion's sting. (தேள் + கொட்டு