பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேடாக்கூறு 65 தேறம் தேடாக்கூறு tedi-k-kuru, பெ. (n.) பேணாமை (யாழ்ப்.); lack of support, neglected condition. (தேடு + ஆ + கூறு. 'ஆ' எதிர்மறை இடைநிலை தேடாத்தேட்டம் tédi-t-tettam, பெ. (n.) பெருமுயற்சி அல்லது தீயவழியா லீட்டிய பொருள் (வின்.); acquisition by unparalleled labour or by unworthy and unjust mcans. [தேடு + ஆ + தேட்டம். 'ஆ' எதிர்மறை இடைநிலை) தேடி tedi, பெ. (n.) அதிவிடயம்; atis. "தேடித் தீந்தேன் றிப்பிலி" (சீவக. 2703 தேடித்தின்னு )-தல் tddi-t-tinnur,14 செகுன்றாவி. (v.t.) 1. அற்றை நாளீட்டிய பொருளான் வாழ்வு நடத்தல் (இ.வ.); to live from hand to mouth. 2. பரத்தமையாய் வாழ்தல் (வின்.); to live by whoredom மறுவ. அன்றாடங்காய்ச்சி [தேடு – தேடி + தின்.] தேடிப்பிடி-த்தல் tedi-p-pidi-, 4 செகுன்றாவி. (v.t.) 1. கண்டுபிடித்தல்; to search. 2. கள்ள க் கணவனைப் பெறுதல்; to procure a paramour. ம. தேடிப்பிடிக்குக [தேடி + பிடி) தேடியதேட்டம் tediya-tettam, பெ. (n.) தாமே ஈட்டிய செல்வம் (யாழ்ப்.); self acquired property. (தேடு – தேடி + தேட்டம்) தேடியாடித்திரி-தல் tedi-y-adi-t-tiri-, 3 செகு.வி. (v.i.) தேடியோடித்திரி-தல், பார்க்க; see tsciy-yodi-tiri-. (செ-அக.), [தேடி + ஆடி + திரி-) தேடியோடித்திரி-தல் tedi-y-odi-t-tiri-, 3 செகுவி. (v.i.) பெருமுயற்சி செய்தல்; to make great efforts. (தேடி + ஓடி + திரிதேடிவை-த்தல் tedi-vai-, 4 செ.குன்றாவி. (v.t.) பொருள் சேர்த்து வைத்தல்; to earn and lay up. [தேடி + வை-) தேடு'-தல் todu-, 5 செகுன்றாவி. (v.t.) 1. துருவி நாடுதல்; to seek, search for, enquire after. "தேடினே னாடிக்கண்டேன்" (தேவா. 189, 3), தேடித் தின்றவர் தெய்வத்தோ டொத்தவர் (பழ. 2. ஈட்டுதல்; to acquire, earn, procure. "பாடுபட்டுத் தேடி" (நல்வழி, 22 தேடிய மூலிகை காலில் தட்டினாற்போல (பழ. 3. பேணல்; to take care of, cherish, foster, provide for. அவனை ஒருவருந் தேடுவாரில்லை (உ.வ.), தேடுவார் அற்ற பிணம் தெருவோடு (பழ. ம. தேடுக; குட, தெட்; துட தொட்க் தோண்டு – தேண்டு – தேடு, ஒ.நோ.: நோண்டு – நேண்டு – நேடு. நேடுதல் - தோண்டுதல் - தோண்டிப் பார்த்தாற் போல் தேடுதல். தேடிப்பார்த்த ல் (வே.க. 287)) தேடு -தல் tidur, 5 செ.கு.வி. (v.i.) முயலல்; to seek, try, as to do a thing. "கோயிலுக்கு எழுந்தருளத் தேட" (குருபரம், SIN), தேடிப் புதைத்துத் தெருவில் இருக்கிறதா? (பழ. தேடு' tedu, பெ. (n.) மீன்வ கை; a fish. தேட்டுத் துண்ட ம் {நாஞ்). ம. தேடு தேடு கூலி tidu-kili, பெ. (n.) ஆவணம் முதலியவற்றைத் துருவிக் கண்டெடுத்தற் குரிய கூலி; search fee, paid for searching a document in a record office (செ.அக.). [தேடு + கூலி) தேண்டு -தல் tendu-, 5 செகுன்றாவி. (v.t.) தேடு-1 பார்க்க; see tech-1, தேண்டிநேர் கண்டேன் வாழி (கம்பரா. உருக்காட்டு. 77). [தேடு – தேண்டு-.] தேண்ம ண்ட லி ten-mandali, பெ. (n.) தேள் மண்ட லி பார்க்க ; see tel-mandali (சாஅக.). (தேள் --> தேண் + மண்டலி) தேணிறம் teniram, பெ. (n.) மாந்தளிர்க் கல் (யாழ்.அக.); a kind of green stone. மறுவ. கற்காவி (தேள் + நிறம்)