பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேத்தடை தேப்புல் தேத்தடை te-t-t-adai, பெ. (n.) தேத்திறால் பார்க்க; see to-t-t-iral. "தேத்தடைத் திரள் கிழிந் தசும்பறா வரை" (தணிகைப்பு. நாட்டு. 14) [தேம் + அத்து + அடை] தேத்தா tetta, பெ. (n.) ஒரு வகை மரம் (யாழ்ப்); a kind of trce. தேத்தாலடி-த்த ல் tettaladi, 4 செ.கு.வி. (v.i.) பலவிடத்தும் மலிவாக விற்றல்; to be available everywhere at a nominal price. கத்தரிக்காய் தெருவெல்லாந் தேத்தா லடிக்கிறது. (நாஞ்) ம. தேத்தலடிக்குக தேத்தான் tutin, பெ. (n.) 1. தேத்தான் கொட்டை பார்க்க ; see tettan-kottai. 2. கழற்சிக்காய்; molucca bean (சாஅக.). தேத்தான்கொட்டை tettan-kottai, பெ. (n.} மருந்துக்குப் பயன்படும் தேற்றா மரத்தின் கொட்டை ; seed of thc watcr clearing tree (சாஅக.). [தேத்தான் + கொட்டை. தேற்றான் - தேத்தான்) தேத்தி titti, பெ. (n.) தேத்தான்கொட்டை பார்க்க ; see tittay-kottai(சாஅக.), தேத்தியன் tettiyan, பெ. (n.) தேத்தான் பார்க்க; see tettan (சாஅக.). தேத்திறால் te-t-t-ital, பெ. (n.) தேனிறால் (தொல் எழுத்து, 344, உரை); honeycomb. [தேன் – தேம் – தேத் + இறால்) தேத்துக்காலி tittu-k-kali, பெ. (n.) அடங்காதவள்-ன்; vagabond, loafer. (தேம்' + காலி – தேத்துக்காலி தேத்துலை te-t-tulai, பெ. (n.) பாறை மீன்; kind of fish called 'parai'. தேத்துவாளை tettu-valai,பெ. (n.) வாளை மீன் வகையுள் ஒன்று ; kind of fishin'valai' species. (தேம் — தேத்து + வாளை) தேதாவெனல் teta-v-epal, பெ. (n.) இசைக் குறிப்பு ; onon, cxpr. of humming the syllables தே, தா in a tune. "தேதாவென வண்டொடு தேன் வரிசெய்" (சீவக. 1066) (தேதா + எனல்) தேது tedu, பெ. (n.) தேசு பார்க்க; see tesu. "தேதெரி பாங்கையி லேந்தி" (தேவா. 892, 4) தெ. தேசு தேதேயெனல் tete-y-enal, பெ. {n.) இசை குறிப்பு ; onom. expr. of humining the syllables தே, தே in a trine. “அஞ்சிறைவண்டு தண்டேன் பருகித் தேதேயெனுந் தில்லையோன்" (திருக்கோ. 822 [தேதே + எனல்] தேந்தம் tendam), பெ. (n.) குதிரைச்சுழி வகை a mark in horses. "பிறப்புவகை வளருந்தேந் தம்” (தஞ்.சர. ii, 117). | தேந்தலை ten-dalai, பெ. (n.}1. செத்தை பார்க்க; sce settai.2. தேங்குழல் (தஞ்சை ) பார்க்க ; see tengulal தேந்தேமெனல் ten-tem-enal, பெ. (n.) இசைக்குறிப்பு ; onom. expr. of the sound of a drum. "தேந்தேமென்னு மணிமுழவமும்" (சீவக. 2921 (தேம் + தேம் + எனல் தேநவரை te-navarai, பெ. (n.) ஐந்துவிரல நீளம் வரை வளரும் நவரை மீன் வகை; redmullet, chestnut, attaining 5 inch in length. [தேம்' + நவரை) தேநீர் tenir; பெ. (n.) தேனில் நீரைக் கலந்து குடிக்குமொரு பருகம்; a drink of honey mixed water. [தேன் + நீர் தேப்பானை te-p-papai, பெ. (n.) தேன் பெய்த பானை ; pot containing honey (நன். 213. மயிலை ), [தேன் + பானை - தேன்பானை – தேம்பானை – தேப்பானை) 'தேப்புல் téppul, பெ. (n.) தேயிலைப் புல் அல்லது சுன்னாரிப்புல்; tea-grass. [தே + புல்] தேததெலே tettele, பெ. (n.) ஒரு மீன் வகை (மீனவ.); a kind of fish.