பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேய்'-த்தல் தேய்த்துக்கொள்ளு-தல் நின்வயி னானே" (குறுந், 42), தேய்ந்தாலும் சந்தனக்கட்டை மணம் போகாது (பழ.) 3. மெலிதல்; to be emaciated; to grow thin, as a child. "சிவனேநின்று தேய்கின்றேன்” (திருவாச. 32, 81, 4. வலிகுன்றுதல்; to become weakened. "அரம் பொருத பொன்போலத் தேயுமே" (குறள், 888, 5. கழிதல்; to lapsc, pass, wear away, as time, 6, அழிதல்; to be effaced, erased, obliterated by rubbing; to be destroyed. "தேயா விழுப்புகழ்த் தெய்வம் பரவுதும்" (கலித். 103) 7. சாதல்; to die. "எம்பியோ தேய்ந்தான்” (கம்பரா. பாசப். 52 ம. தேயுது; க. தேய்; தெ. தேயு; து. தேயுனி; பட. தேயி; குட., கோத, தேய் தேய்த்த ல் tey-,4 செ.குன்றாவி. (V..) 1. உரைசச் செய்த ல்; to rub, rub away, waste by rubbing. "மாநாகங் கொண்டாற் கொப்புளாம் விரலிற் றேய்த்தால்" (சீவக. 1288).2. குறைத்தல்; to reduce. "அழுத கண்ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை " (குறள், 555, 3. அழித்த ல்; to kill, destroy. "செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை" (திருமுருகு 3. 4. துலக்குதல்; to scour, scrub, polish by rubbing, as a wall, as a vessel; to clean, as teeth. பாத்திரத்தைத் தேய்த்து வைத்தாள் (உ.வ. காலையில் படுக்கையினின்று எழுந்தவுடனும் இரவில் படுக்கச் செல்லும் முன்பும் பல் தேய்த்தல் நலம். 5. துடைத்தல்; to efface, erase, obliterate by rubbing. எழுத்தைத் தேய்த்து விட்டான். 6. செதுக்குதல்; to pare, shave, cut, as a gem. "மணியிற் றேய்த்த வள்ளமும்” (கம்பரா. வரைகி. 4017. எண்ணெய் முதலிய அழுந்தப் பூசுதல்; to rub in, as oil, ointment or liniment. காரிக்கிழமை தோறும் எண்ணெய்த் தேய்த்துக்குளிப்பது அவர் வழக்கம். ம. தேய்க்குக தேய்க்க ல் tey-k-kal, பெ. (n.) 1. தேக்கல் பார்க்க ; see tekkal. 2. தேய்க்குதல்; rubbing (சா.அக.), தேய்கடை téy-kadai, பெ. {n.} 1. தேய்ந்த து; that which is worn out, as an implement. 2. வளர்ச்சியற்றது; that which is stunted in growth. (தேய்வு + தேய்வடை - தேய்கடை] தேய்கடைப்பணம் tey-kadai-p-panam, பெ. (n.) வழங்கித் தேய்ந்த காசு; coin worn out by use. [தேய்கடை + பணம்) தேய்கடைப்பிள்ளை tey-kadai-p-pillai, பெ. (n.) 1, வளர்ச்சியில்லாத குழந்தை ; child of stunted growth or dwarfish in size. 2. மெலிவடைந்த குழந்தை ; anemaciatedchild. மறுவ. சவலைக் குழந்தை (தேய்கடை + பிள்ளை தேய்க ல் tey-kal, பெ. (n.) உரைகல்; touch-stone (W). | ம. தேப்புகல்லு; தே. தேங்கல்லு (தேய் + கல்) தேய்ச்சுமாய்ச்சுப்போடு-தல் teyccu-mayccup-podu-, 19 செ.குன்றாவி. (v.t.) 1. பொருள் முதலியவற்றைச் சிறுகச் சிறுகச் செலவிட்டு வீணாக்குதல்; to waste gradually or little by little. 2. கடன் கொடுத்தவனுக்குப் பொந்திகை (திருப்தியில்லாமல் சிறிது சிறிதாகக் கொடுத்துக் கழித்த ல்; to pay; as a debt, in such small sums as not to satisfy the creditor. 3. அழுத்தமின்றிச் செய்தல்; to do superficially, as a work. 4. அமுக்கிவிடுதல்; to hush up, as a crime.) [தேய்ச்சு + மாய்ச்சு + போடு) தேய்த்துக்குளி' teyttu-k-kuli, பெ. (n.) எண்ணெய்க் குளியல் (நாஞ்); oil bath. ம. தேச்சுகுளி (தேய் – தேய்த்து + குளி] தேய்த்துக்குளி'-த்தல் tey-t-tu-k-kuli-, 4 செ.குன்றாவி. (v.t.) உடலைத் தேய்த்துக் குளித்தல்; to rub of body {சாஅக.). ம, தேச்சுகுளிக்குக (தேய் – தேய்த்து + குளி-) தேய்த்துக் கொள்ளு-தல் teytru-k-kollu-, 7 செகுன்றாவி. (v.t.) 1. எண்ணெய்யை உடம்பிற் தேய்த்துக் கொள்ளல்; rub or smearing of oil on the body. 2. இரு பெண்டிர் தம்முடன் ஏற்படுத்திக் கொள்ளும் கலவி; to have an