பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேர்முல்லை 76 தேர்விளக்கு temple car. “தேர்முட்டி கிட்டே இருக்கின்ற சந்தையில் வாங்கினேன்” (மதுரை ! (தேர் + முட்டி) தேர்முல்லை ter-mullai, பெ. (n.) பகைவரை வென்று மீண்ட தன் தலைவனது தேர் வரவறிந்து தலைவி மகிழ்ந்து கூறும் புறத்துறை (பு.வெ.10, முல்லைப். 3); theme of the return of a hero in his chariot after subduing his enemies, sung in joy by his lady-love. (தேர் + முல்லை தேர்மூடு ter-mudu, பெ. (n.) தேர்நிலை (நாஞ்); chariot stand (தேர் + மூடு தேர்மொட்டு ter-mottu, பெ. (n.) 1. தேர்க்கூம்பு பார்க்க; see ter-k-kimbu. 2. பூவரச மரத்தின் முதிர்ந்த மொட்டு (நாஞ்); mature budof portia. (தேர் + மொட்டு) தேர்வட்டை ter-vattai, பெ. (n.) தேர்க்கால் (சிலப். 14: 165) பார்க்க ; see ter-k-kal. ம. தேர்வட்டு (தேர் + வட்டை ) தேர்வடம் ter-vadam,பெ. {n.) தேரிழுத்தற்குரிய பெரிய கயிறு; cable, thick rope for drawing a car. "மணலையு மேவுதேர்வட மாக்கலாம்" (அருட்பா . 6, வயித்திய. 4) [தேர் + வடம்) தேர்வண்ம லையன் tervan-malaiyan, பெ. (n.) வடவண்ணக்கன் பெருஞ்சாத்தனாரால் புறநானூற்றிலே பாடப்பெற்றவன்; supposed to be a king sung by Vadavannakkan Perurjattanar (தமி.சொ .அக.). [தேர்வண் + மலையன்) தேர்வண்மை ter-vanmai, பெ. (n.) புலவர் முதலியோர்க்கு அரசர் அளிக்குந் தேர்க் கொடை ; gift of chariots made by kings to poets. "தேர்வண்பாரி" (புறநா. 18) [தேர் + வண்மை தேர்வலவன் ter-valavan, பெ. (n.) தேர்ப்பாகன்; charioteer. "திண்டேர் வலவ கடவெனக் கடைஇ” (அகநா. 74) (தேர் + வலவன்] தேர்வலான் ter-valia, பெ. (n.) தேர்வலவன் பார்க்க ; see ter-valavan. "தேர்வலான் செப்புவான்” (கம்பரா. தைல. 2011 (தேர் + வலான்) தேர்வாசம் ter-vasam, பெ. (n.) அரசு; pipal tree (சாஅக.). தேர்வாணம் ter-vanam, பெ. (n.) வாணவகை; a kind of rocket. [தேர் + வாணம்) தேர்வாணைக்குழு tCrvanai-k-kulu, பெ. (n.) அரசுப்பணிக்குத் தக்கவர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்புடைய, அரசால் அமர்த்தம் பெற்ற உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பு: public service commission (to select employees for government service). [தேர்வாணையம் + குழு) தேர்வாணையம் tervinaiyam, பெ. (n.) தேர்வாணைக்குழு பார்க்க; see tervanai-k-kulu. (தேர்வு + ஆணையம்) தேர்வுநிலை tervu-nilai, பெ. (n.) 1. அரசுப் பணியில், குறிப்பிட்ட ஆண்டுகள் பணியாற்றியவருக்கு, அதே பணியிடத்தில் தரும் உயர்நிலை; selection grade. பத்தாண்டு பணிபுரிந்த தமிழக அரசு ஊழியர்களுக்குத் தேர்வு நிலை வழங்கப்படும் 2. வருமான அடிப்படையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கும் உயர்நிலை ; selection grade to local bodies on the basis of higher revenue raised. சேலம் மாவட்டத்திலுள்ள ஆறகழுர் ஊராட்சியைத் தேர்வுநிலை ஊராட்சியாக இந்த நிதியாண்டில் அரசு அறிவித்தது. [தேர்வு + நிலை) தேர்விருந்து ter-virundu, பெ. (n.) தேர்த் திருநாளன்று ஒருவன் தன் மாப்பிள்ளைக்குச் செய்யும் விருந்து (இ.வ.); feast given by a person to his son-in-law on the day of car festival in the local temple. [தேர் + விருந்து) தேர்விளக்கு ter-vilakku, பெ. (n.) தேர்போ லொப்பனை செய்யப்பெற்ற அடுக்கு விளக்கு (இ.வ.); light arranged in the form of a chariot [தேர் + விளக்கு)