பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 5, PART 2, நி,நீ.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

நிகரார் நிகரார் nigarār, பெ. (n.) பகைவர் (திவா.); enemies. "நிகரா ருயிர்க்கு நஞ்சாய வேற்கைக் குலோத்துங்க சோழன்" (குலோத். CIT. 384.). [நிகர் நிகரார்.] நிகரி nigari, வி.எ. (adv.) பகைத்து; with enmity. [நிகர் + இ.] நிகரிடு-தல் nigaridu-, 17 செ.குன்றாவி. (v.t) ஒப்பிடுதல்; to compare. "தன்னொடு நிகரா என்னொடு நிகரிப் பெருநலம் தருக்கம் என்ப விரிமலர்த்" (ஐங்குறு. 67.). [நிகர் + இடு.] நிகரில்பக்கம் nigaril- pakkam, பெ. (n) 1. எதிர்க்கட்சி; opposite side or party. 2.எதிரிடையான கொள்கை; opposite view. "பக்க நிகர்பக்க நிகரில்பக்கமென" (சி.சி.அளவை.9). [நிகர் + இல் + பக்கம்.] நிகரில்லகறை nigarillagarai, பெ.(n.) கரிசலாங் கண்ணி; eclipse plant- Echypta prostata. (சா.அக.). 3 நிகழ்-தல் நிகரில்லாவாசான் nigarillā-v-āsān, பெ. (n.) (ஞானக் கண்) அறிவுக்கண்; eye of wisdom. (சா.அக.). நிகரிலிசோழமண்டலம் nigar-ili-c6la- mandalam, பெ. (n.) சோழராட்சிக்குள்ளடங் கியிருந்த எருமையூ (மைசூ) ரிலொரு பகுதி; a division in Mysore when it formed part of the Cōla dominion. [ நிகரிலிசோழன் + மண்டலம். ] மண்டிலம் மண்டலம் நிகரிலிசோழன் nigar-ili-cölan, பெ.(n.) முதலாம் இராசராசன் பட்டப்பெயர்களு ளொன்று (I.M.P.Tn. 109.); one of the titles of Raja Raja the first. [நிகரிலி + சோழன்.] நிகரோதயம் nigarödayam, பெ. (n.) சிற்றரத்தை; lesser galangal. Alpinia galanga (minor.) (சா.அக.). நிகலம் nigalam, பெ. (n.) 1. தோள்மேல், (வின்.); the upper part of the shoulder. (சா.அக.). 2. பிடர் (வின்.); nape. நிகவா nigavā, பெ. (n.) 1. பிரமிப்பூடு; hyssop plant-zoofa-hyssopus officinalis. 2. நீர்ப்பிரமி; Indian brahmi- Gratiola monicri (சா.அக.). நிகழ்-தல் nigal-, 4 செ.கு.வி. (v.i.) 1. நேருதல்; to happen, occur. "தொண்டனார்க் கங்கு நிகழ்ந்தன" (பெரியபு. திருநா.380.). 2. நடந்துவருதல்; to be current, passing, as time. "நிகழுங் காலத்துச் செய்யு மென்னுங்