பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 5, PART 2, நி,நீ.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

நிமிட்டு-தல் நிமிட்டு'-தல் nimittu-, 5 செ. குன்றாவி. (v.t.) 1. கிள்ளுதல் (வின்.); to pinch, as in punish- ment. 2. நெருடித் தூண்டுதல்; to trim, as a wick. 3. கசக்குதல் (வின்.); to rub or crush between the hands, as grain. (நிமிடுநிமிட்டு-,) நிமிட்டு ? nimittu, பெ. (n.) கிள்ளுகை; pinch. நிமிடன் nimidan, பெ. (n.) மிகத்திறமை யானவன்; extremely clever person. [நிமிடு நிமிடி நிமிடன்.] நிமிடி nimidi, பெ. (n.) நெருடி; a hand sig- nai. "அகினா றங்கை சிவப்ப நல்லோர் துகிலின் வெண்கிழித் துய்க்கடை நிமிடி உள்ளழுதுறீஇய வொள்ளடர்ப் பாண்டி (பெருங். உஞ்சை. 33:91.). நிமிடி2 nimidi, பெ. (n.) சுறுசுறுப்புள்ளவன்; clever, active person. அவன் வேலையில் நிமிடி. (உ.வ.). [நிமிடு நிமிடி.] நிமிடிபாதம் nimidipadam, பெ. (n.) 1. கண்டிப்பு; strictness. 2. தன்முரண்டு; obstinancy. நிமிடு' nimidu, பெ. (n.) திறன்மிகு வேலை (இ.வ.); clever workmanship. (நிமையம் நிமிடு.] ஒரு வேலையை விரைவாய்ச் செய்தலை ஒரு நொடியில் முடி என்றும் ஒரு நிமையத்தில் முடி என்றும் வழங்கும் வழக்கில் இச்சொல் உருவாகியிருக்கலாம். 39 28 நிமித்தத்துவம் நிமிடு'-தல் nimidu-, 5 செ. குன்றாவி. (v.t நெருங்குதல்; to feel between fingers. "துகிலின் வெண்கிழித் துய்க்கடை நிமிடி' (பெருங். உஞ்சை. 33, 92.). நிமிண்டி nimindi, பெ. (n.) 1.சிறு திருடன் (வின்.); sly thief. 2. எறும்பு வகை (யாழ்.அக.); a kind of ant. நிமிண்டு நிமிண்டி.] நிமிண்டு'-தல் nimindu-, 5 செ. குன்றாவி. (v.t) 1. கசக்குதல்; to crush, squeeze between the hands, as grain, "கொல்லைக்கம்பை நிமிண்டியு மூதியுந் தின்ன வல்லோர்" (தனிப்பா. i, 142,38). 2. கிள்ளுதல்; to pinch, nip off, with the fingers. 3. பிறர் அறியாமல் சிறிதுசிறிதாகக் கவர்தல் (யாழ்ப்); to pilfer little by little. [நிமி→ நிமிண்டு-.) நிமிண்டு?-தல் nimindu-, 5 செ. குன்றாவி. (v.t.) கட்டை விரலுக்கும் சுட்டுவிரலுக்கும் இடையே பிடித்து அழுத்தி முன்பின் அசைத்தல்; to pinch, to trim as a wick, etc. குழந்தையின் கன்னத்தை நிமிண்டக் கை குறுகுறுத்தது (உ.வ.). விளக்குத் திரியை நிமிண்டினாள். (உ.வ.) (நிமி நிமிண்டு- நிமித்த சூடாமணி nimitta-Sūdamani, பெ. (n) நிமித்த (சகுண) நூல் (யாழ்.அக.); a trea- tise on omens. [நிமித்தம் + சூடாமணி.] நிமித்தத்துவம் nimi-t-tattuvam, ஏதுத் தன்மை (சங்.அக.); causality. பெ. (n.) 39