பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 5, PART 2, நி,நீ.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

நிர நிர nira, பெ. (n.) 1. நிறைவடைதல்; to be full. படி நிரக்க அளந்து ஊற்றினாள் (உ.வ.). 2. பங்கிடுதல்; to share. எல்லோருக்கும் நிரந்து கொடு (உ.வ.) நிரக்க nirakka, வி.எ. (adv.) (பொந்திகையான வகையில்) நிறைய; to be full. திருமணத்துக்கு வந்திருந்தவர்களுக்கு நிரக்கப் பரிமாறினார்கள் (உ.வ.) [நிர→ நிரக்க.] நிரகுள்ளி niraku//i, பெ. (n.) நொச்சி; five leaved chaste tree- vitex negundo. (சா.அக.). நிரஞ்சத்திமூலி nirañjattimūli, பெ. (n.) நிலத்துளசி; ground basil- ocimum prostatum. (சா.அக.). நிரஞ்சனம் nirañjanam, பெ. (n.) 1. அறிவு (ஞான)க் கண்; eye of wisdom. 2. உணவு கொள்ளாமை; abstaing from food. (சா.அக.). நிரட்டிகா nirattigā, பெ. (n.) கண்டங்கத்திரி; yellow barried night shade-solanum jacquini. (சா.அக.). நிரந்தவர்' nirandavar, பெ. (n.) பகையரசர்; நிரந்தவர்? nirandavar, பெ. (n.) (கூடாதிருந்தே தமக்கு வாய்க்குமிடம் பெறுந்துணையும்) கூடியொழுகுவார்; to attacher. "சீரிடங் காணின் எறிதற்குப் பட்டடை நேரா நிரந்தவர் நட்பு”(குறள்,821.) நிரந்து nirandu, பெ. (n.) 1. நிரல்படக் கோத்து: to join correctly. “விரைந்து தொழில்கேட்கும் 33 நிரப்பிவிடு-தல் ஞாலம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின்” (குறள், 648). 2. வரிசையுற்று; to roll. "நரந்த நாறுங் குவையிருங்கூந்தல் நிரந்திலங்கு வெண்பல் மடந்தை” (குறுந். 52.) [ நிர → நிரந்து ] நிரப்படுபுணை nira-p-padu- punai, பெ. (n.) வறுமையைக் கடத்தற்குரிய தெப்பம்; a device to manage the poverty. "இரப்பச் சிந்தியே னிரப்படு புணையின் உளத்தினளக்கு மிளிர்ந்த தகையேன்” (புறநா. 376.). [நிரப்பு = வறுமை, ஏழ்மை. நிரப்பு + படு + புணை.] நிரப்பம் nirappam, பெ. (n.) 1. முழுமை; full- ness, repletion, perfection. 'நிரப்ப மெய்திய நேர்பூம் பொங்கணை' (பெருங். மகத. 14,62.). 2. சிறப்பு; superiority, excellence. (திவ். திருவாய். 1,2,3, பன்னீ.). 3. ஒப்புமை; Sym- metry. 'நிரப்பமில் யாக்கை' (கலித். 94.). 4.சமம்; uniformity. "குடக்குந் தெற்குங் கோண முயர் நிரப்பங் கொளீஇ” (பெருங். இலாவாண. 4,59-60.). 5. கற்பு; chastity. (திவ்.திருவாய். 5,3,3, பன்னீ.). /நிரம்பு → நிரப்பு → நிரப்பம்.] நிரப்பலா nirappalā, பெ. (n.) ஆசினிப்பலா; the bread fruit tree- artocarpus. incisa. (சா.அக.). நிரப்பிவிடு-தல் nirappi-vidu-, 18 செ.குன்றாவி. (v.t) 1. நிறைவு செய்தல்; to complete, fulfil. 2. சூலடையச் செய்தல்; to impregnate. (Loc.) 3. நிறைகுடத்தடியில் நெற்பரப்புதல்; (வின்.). to strew paddy round a niraikudam.