பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 5, PART 2, நி,நீ.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

நிரியம் நிரியம் niriyam, பெ. (n.) தினை; Italian-mil- let-panicum italicum. (சா.அக.). நிருங்கு-தல் nirungu-, 9 செ.கு.வி. (v.i.) 1. நொறுங்குதல்; to be mashed, crushed to pieces 2. தேய்கடையாதல்; to be deficient in growth; to decay; to grow lean, as a child; to fail, as a business, a harvest. [நலிவு நலுங்கு → நருங்குநிருங்கு.) நிருங்கு2 nirungu, பெ. (n.) வளர்ச்சிக் குறைவு; stunted growth. [நலிவு→ நருங்கு நிருங்கு.] நிருத்தி nirutti, பெ. (n.) ஒரு தருக்கநூல்; an astorict book. நிருதிதா nirutita, பெ. (n.) கோடாசூரி; a virulent mineral poison. (சா.அக.). நிருவாலி niruvāili, பெ. (n.) காட்டுப்பூவரசு; false fern tree-folicium decipiens. (சா.அக.). நிரை-தல் nirai-, 4 செ.கு.வி. (vi) 1. வரிசையாதல்; to be in a row; to form a column. 2. முறைப்படுதல்; to be regular, orderly. 3. திரளாதல்; to crowd, swarm. “நிரைவிரி சடைமுடி" (தேவா. 994.9). [நிர நிரை.] நிரை-த்தல் nirai-, 4 செ.குன்றாவி. (v.t) 1. ஒழுங்காய் நிறுத்துதல்; to arrange in 40 நிரை-தல் order, classify. "முட்ட நித்தில நிரைத்த பந்தரில்" (பாரத. கிருட்டிண.103).2 நிரப்புதல்; to crowd, cluster “நிரைதிமில் வேட்டுவர்” (மதுரைக்.116.). 3. பரப்புதல்; to spread, over. "நெடுங்கழைக் குறுந்துணி நிறுவி மேனிரைத்து" (கம்பரா. சித்திர.46.). 4. கோத்தல்; to string together, “நிணநிரை வேலார்" (பு.வெ.1,9). 5. நிறைவேற்றுதல்; to fulfil, accomplish, perform. 6. fl தனியாகச் சொல்லுதல் (வின்.); to enumerate, say, declare. 7. ஒலித்தல் (வின்.); to sound. [ நிர நிரை.] நிரை-தல் nirai-, 4 செ.குன்றாவி. (v.t) 1.நிரப்புதல் (யாழ்ப்.); to make full, crowd fill up by adding thing to thing. "வயிறு நிரைந்த மட்டும் உண்டேன்" (உ.வ.) 2. ஒழுங்காக்குதல்; to place in row. 3. ஓலை முதலியவற்றை வரிசையாக வைத்து மறைத்தல்; to hide or cover as with plaited leaves. தோட்டம் மூன்றுபுறமும் நிரைந்திருக்கிறது (உ.வ.). 4. முடைதல்; to plait வீடுவேயக் கிடுகு நிரைகிறார்கள் (2.621.). [நிர நிரை.] நிரை4-தல் nirai-, 4 செ.கு.வி. (v.i.) 1. திரளுதல்; to swarm, crowd together. "மேகக் குழாமென நிரைத்த வேழம் (சீவக.1859). 2. அவைகூட்டுதல்; to form an assembly, "மறுநிலை மைந்தனை நிரைத்துக் கிளைகொள் வழக்குய்த்தலும்" (கல்லா.43.21.). 3. தொடர்ந்து வருதல்; to follow in succes- sion. "நிரைத்த தீவினை நீங்க" (சீவக.1603). [நிர → நிரை]