பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 5, PART 2, நி,நீ.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

நிலஅதிர்வு 45 நிலக்கடலைச்செடி நிலஅதிர்வு nila-adirvu, பெ. (n) நிலக்கடம்பு1 nila-k-kadambu, பெ. (n.) பேரழிவையுண்டாக்கிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்படும் மெல்லிய நில அதிர்வு; after shock. [நிலம் + அதிர்வு] நிலஅவுரி nila-avuri, பெ. (n.) பேராவுரி; செடிவகை (A); a plant. a large variety of indigo plant-Indigofera | நிலக்கடலை nila-k-kadalai, பெ. (n.) tinctoria. (சா.அக.). நிலஅளவர் nila-a/avar, பெ. (n.) நிலங்களை அளந்து பதிவுசெய்து ஆவண மாக்கும் அலுவலர்; surveyor (of land). [நிலம் + அளவர்.] நிலஆவிரை nila-āvirai, பெ. (n.) நிலவாகை பார்க்க; see nila-vāgai. [நிலம் + ஆவிரை.) நிலஇயல் nila-iyal, பெ. (n.) நிலவியல் பார்க்க; see nila-v-iyal. [நிலம் +இயல்.] நிலஇலந்தை nila-ilandai, பெ. (n.) நிலவிலந்தை பார்க்க; see nila-v-ilandai. [நிலம் + இலந்தை.] நிலஉடமை nila-udamai, பெ. (n.) நிலஉடைமை பார்க்க; see nila-udaimai. [நிலம் + உடமை. உடைமை → உடமை.] நிலஉடைமை nila-udaimai, பெ. (n.) தனிப் பட்ட முறையில் நிலம் சொத்தாக இருப்பது; landed property. நில உடைமைக் குமுகாயம். [நிலம் + உடைமை.] [நிலம் + கடம்பு.] நிலக்கடம்பு nila-k-kadambu, பெ. (n.) குதிரைக்குளம்பு; horse hoof plant. (சா.அக.). (எண்ணெய் எடுக்கப் பயன்படுவதும் உணவுப் பொருளாகப் பயன்படுவதுமான) இரு பகுதிகளாக உடையக் கூடிய, சிறு நீள் உருண்டை வடிவ ஓட்டினுள் இருக்கும் பருப்பு; வேர்க்கடலை; peanut (the nut and the crop); ground nut. [நிலம் + கடலை.) இது வேரிற் காய்ப்பதால் வேர்க்கடலை; நிலத்தடியிலிருப்பதால் நிலக்கடலை; அயலகப் பயிராயினமையால் மணிலாக் கொட்டை அல்லது மல்லாக் கொட்டை; கப்பலில் வந்தமையின் கப்பற்கடலை என்றழைக்கப் படும். நிலக்கடலைச்செடி nila-k-kadalai-c-cedi, பெ.(n) (எண்ணெய் எடுக்கவும் உணவுப் பொருளாகவும் பயன்படும்) இரு பகுதிகளாக உடையக் கூடிய சிறு நீள் உருண்டை வடிவ ஓட்டினுள் இருக்கும் பருப்பையுடைய கடலை வேரில் காய்க்கும் சிறு செடி; groundnut plant, groundnut crop. [நிலக்கடலை + செடி.]