பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 5, PART 2, நி,நீ.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நிலக்குற்றம் 49 நிலக்கொறுக்கை நிலக்குற்றம் nila-k-kurram, பெ. (n.) அரங்கக்குற்றம்; defect in theatre, stage. எண்ணப்பட்ட நாடக நூலாசிரியர், வகுத்த இயல்புகளின் வழுவாதவகை அரங்கு செய்யத் துவர் வரி வளை பொருத்தல் முதலிய நிலக்குற்றங்கள் நீங்கின விடத்து” (சிலப்.3:95. உரை.). [நிலம் + குற்றம் ] நிலக்குறி nila-k-kuri, பெ. (n.) நிலத்தின்மேல் நிலக்கொட்டை1 nila-k-kottai, பெ. (n.) நிலக்கடலை பார்க்க; see nila-k-kadalai. (சா.அக.). [நிலம் + கொட்டை.] நிலக்கொட்டை 2 nila-k-kottai, பெ.(n.) பூடுவகை (வின்.); a kind of plant நிலக்கொடி nila-k-kodi, பெ. (n.) நிலமகள் பார்க்க; see nila-magal. "நிலக்கொடியுந் துயர் நீத்தனள்" (கம்பரா. திருவவ.122). [நிலம் + கொடி.] நிலக்கொடிவேலி nila-k-kodivëli, பெ. (n) நீலக்கொடிவேலி பார்க்க; see nila-k-kodiveli. (சா.அக.). சில சாற்றைப் பிழிய அதன் கீழுள்ள நிலக்கொதி nila-k-kodi, பெ. (n.) பொருட்குவையைக் கண்டறியுமாறு தோன்றும் அடையாளம் (வின்.); sign said to appear on the ground when certain juices are poured on it, showing the presence of treasure underground and its quality. [நிலம் + குறி.] நிலக்கூந்தல் nila-k-kundal, பெ. (n) கொடியாள் கூந்தல் என்னும் செடி; pea-fruited dodder. [நிலம் + கூந்தல்.] நிலக்கூலி nila-k-kāli, பெ. (n.) நிலவாடகை; rent for land. "நிலக்கூலி தண்டிப் போந்த படிக்கும்" (தெ.க.தொ. 6:385.). [நிலம் + கூலி.] நிலக்கொதிப்பு பார்க்க (வின்.); see nila-k- kodippu. [நிலம் + கொதி.] நிலக்கொதிப்பு nila-k-kodippu, பெ. (n.) வெய்யோனின் வெப்பத்தால் நிலத்திலெழும் வெக்கை; heat of the ground, due to hot sun. [நிலம் + கொதிப்பு.] நிலக்கொறுக்கை nila-k-korukkai, பெ. (n.) மஞ்சணிறமானதும் இரண்டடி நீளம் வளர்வதுமான கடல்மீன் வகை; sea-fish, ca- nary-yellow, attaining two feet in length. [நிலம் + கொறுக்கை.]