பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 5, PART 2, நி,நீ.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நிலக்கோட்டை 50 நிலக்கோட்டை nila-k-köttai, பெ. (n) ஒருவகைப்பூண்டு; a kind of shrub. நிலகடகம் nila-kadagam, பெ. (n.) சிவதுளசி; shiva's basil-Basili cum alba. (சா.அக.). நிலகந்திகம் nilakandigam, பெ. (n.) நொச்சி; notchy-vitex negundo. (சா.அக.). நிலகி nilagi, பெ. (n.) கள்ளிக்கொடி; creep- ing milk hedge-sarcostemma intermedium. (சா.அக.). நிலகிக்கொத்தவரை nilagi-k-kottavarai, பெ. (n.) இனிப்புக்கொத்தவரை; sweet clus- ter bean-cyamopsis psoralioides. (சா.அக.). நிலங்கடந்தநீனிறவண்ணன் nilan- kadandaniniravappan, பெ. (n.) திருமால்; tirumal. "காமன் மகன் அநிருத்தனைத் தன்மகள் உழை காரணமாக வாணன் சிறை வைத்தலின், அவனுடைய சோவென்னும் நகரவீதியிற் சென்று நிலங்கடந்த நீனிற வண்ணன் குடங்கொண்டாடிய குடக்கூத்தும்” (சிலப்.6.55:உரை.). [நிலம் + கடந்த + நீலம் + நிறம் + வண்ணன்.] நிலச்சரிவு நிலங்கடந்தநெடுமுடியண்ணல்: nat kadanda-nedumudi-y-annal, பெ. (n.) திருமால்; tirumal. "நீணிலங்கடந்த நெடுமுடியண்ணல் தாடொழுதகையேன் போகுவல் யானென" (சிலப்.11:147) [நிலம் + கடந்த + நெடுமுடி + அண்ணல்.] நிலங்கீறு-தல் nilan-kiru-, 7 செ.கு.வி. (v.i.) பொழுது புலருதல் (நெல்லை); to dawn. [(நிலம் + கீறு-,] காலைக் கதிரவன் நிலத்தைக்கீறி வெளி வருவது போன்று தோன்றுதலால் இவ்வாறழைக்கப்பட்டிருக்கலாம். நிலங்கு nilangu, பெ. (n.) பெரியகாடை (பிங்.); quail. நிலங்கொள்பாம்பு nilan-kol-pāmbu, பெ. (n.) நிலத்திலிருக்கும் பாம்பு; snakes. "நிலங்கொள் பாம்பின் இழிதரும் விலங்கு மலை நாடனொடு கலந்த நட்பே” (குறுந்.134.). [நிலம் + கொள் + பாம்பு.] நிலச்சம்பங்கி nila-c-cambangi, பெ. (n.) செடிவகை; tuberose. கல் [நிலம் + சம்பங்கி.) நிலச்சரிவு nilla-c-carivu, பெ. (n) மேடான இடத்திலிருந்து மண், மலையிலிருந்து பாறை, முதலியவை திடுமெனப் பெயர்ந்து விழுதல்; landslide. பெருமழை பெய்ததால் நீலமலையில் நிலச்சரிவு ஏற்பட்டுப் போக்குவரத்துத் தடைபட்டது. (உ.வ.). [நிலம் + சரிவு.]