பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 5, PART 2, நி,நீ.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நிலந்தட்டி2 54 நிலந்தெளிதல் நிலந்தட்டி2 nilan-tatti, பெ. (n.) கடல்மீன் வகை; a kind of sea-fish. நிலந்தடி nilantadi, பெ. (n.) நிலந்தட்டி' (நாஞ்சில்.) பார்க்க; see nilan-tatti. [நிலந்தட்டி → நிலந்தடி.] நிலந்தரஞ்செய்-தல் nilan-tarañ-cey-, 1செ.குன்றாவி. (v.t.) முற்றும் அழித்தல்; to de- stroy utterly, as razing to the ground "துயராயினவெல்லா நிலந்தரஞ் செய்யும் (திவ்.பெரியதி.1.1.9). [நிலம் + தரம்செய்-,) நிலந்தருதிருவிற்பாண்டியன் nilantaru- tiruvir-pāndiyan, பெ. (n.) தொல்காப்பியம் அரங்கேறிய அவைக்குரியோனும் இடைச்சங்க காலத்தவருமான பாண்டியன் (தொல்.பாயி.); Pandiyan of the second sangam in whose court Tolkappiyam was first approved and published. பல நிலந்தருதிருவின்நிழல் nilan-taru-tiruvin nilal, பெ. (n.) நிலத்திற்குப் செல்வத்தினையும் தருகின்ற அருள்; benidiction. நிலந்தருதிருவின் நிழல்வாய் நேமி (சிலப்.15:1.). (நிலம்+தரும்+நிழல்.) மன்னன் குடிகளிடத்து அருளுடையான் ஆயவழி நிலத்துப் பல்வளமும் பெருகுமாகலின் நிலந்தருவின் நிழலாயிற்று. நிழல்=அருள். மாற்றாரது நிலத்தைத்தரும் வெற்றியாகிய செல்வம் என்றும், ஒளிபொருந்திய ஆணைச்சக்கரம் என்றுமாம். நிலந்தருதிருவினெடியோன் nilantaru- tiruvinediyön, பெ. (n.) நிலந்தருதிருவிற் பாண்டியன் பார்க்க; see nilan-taru- tiruvir-pāndiyan. “புகழ்சால் சிறப்பி னிலந்தரு திருவினெடியோன் போல்” (மதுரைக். 763). [நிலம் தருதிருவின் + நெடியோன்.] நிலந்திரைத்தானை nilan-tirai-t-tāpai, பெ. (n.) நிலஅகலத்தைத் தன்னுள்ளே அடக்கிய தானை; battalian of army. “கலந்த கேண்மையிற் கனக விசயர் நிலந்திரைத் தானையொடு நிகர்த்துமேல்வர” (சிலப்.26:186.). "நிலந்திரைக்கும் கடற்றானை" (புறநா. 96). [நிலம் + திரைத்த + தானை ] திரைத்தல் = சுருங்குதல், நிலவகலத்தைத் தன்னுள்ளே யடக்குதல். நிலந்தெளிதல் nilan-telidal, பெ. (n.) பொழுது புலரல்; day-breaking. [நிலம் + தெளிதல்.) இருளாற் கவ்வப் பட்டிருந்த நிலத்தைத் தன் கதிரொளியால் புலப்படுத்தித் தெளிவிக்கின்றமையால் பொழுது புலரலை நிலந்தெளிதல் என்றனர்.