பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 5, PART 2, நி,நீ.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நிலப்பயன் அது மன்னராட்சிக் காலத்தில், தேர், கரி, பரி, காலாள் என நான்வகையாய் அமைந்தி ருந்தது. இன்றைய மக்களாட்சியில் நிலம், நீர், வான் என மூவகையாய்ப் பாகுபாடு கொண்டது. அஃதெவ்வாறாயினும் காலட் படையாம் நிலப்படை இன்றுவரை தொடர்ந்து வருகின்றது. நிலப்பயன் nila-p-payan, பெ. (n.) நில விளைவு (வின்.); produce of the soil, profit on the land. (நிலம் + பயன்.] நிலப்பயிர் nila-p-payir, பெ. (n.) பெண் (வைத்தியபரி.கருப்பொ.); female, நிலப்பரணி nila-p-parani, பெ. (n.) சிற்றீஞ்சு; small date fruit-phoenix farnifera. (சா.அக.). நிலப்பரப்பு nila-p-parappu, பெ. (n) 1. நிலத்தின் பரப்பளவு (வின்.); a measure of land. 2. நிலப்பந்தின் பரப்பளவு; spread of ex- tent of the earth. [நிலம் + பரப்பு.] நிலப்பலா nila-p-palā, பெ. (n.) வேர்ப்பலா (சங்.அக.); common jack fruit. [நிலம் + பலா.] நிலத்தடியில் காய்க்கும் கடலை நிலக்கடலை என்றாற் போல், நிலத்தையொட்டியுள்ள வேரில் பழுக்கும் வேர்ப்பலா நிலப்பலா எனப்பட்டது. நிலப்பனை nila-p-panai, பெ. (n.) செடிவகை (பதார்த்த. 403.); moosly or weevil root- curculigo orchioides. [நிலம் + பனை. ] 56 நிலப்பாலை1 நிலப்பனைக்கிழங்கு nila-p-papai-k-kilangu, பெ. (n.) நிலப்பனையின் கிழங்கு; ground palm-curculigo orchioides. [நிலப்பனை + கிழங்கு.] பனைமரத்தின் கொட்டைகளை மண்ணில் புதைத்து வைத்து, குறிப்பிட்ட காலம் வரை தண்ணீர் ஊற்றி வந்தால் முளைவிட்டு கிழங்காக வளரும். இதுவே பனைக் கிழங்கு. இக் கிழங்கு மருத்துவக் குணங்களைக் கொண்டது. (சா.அக.). நிலப்பாகல் nila-p-pāgal, பெ. (n.) பாகல் 621605 (106060.); balsam-apple, climber- mormordica humilis. [நிலம் + பாகல்.] பாகல் கொடிப் பாகல், நிலப்பாகல் என இரு வகையுடைத்து. கொடிப்பாகல் என்பது மரம்,செடி வேலி போன்றவற்றில் படர்ந்து காய்க்கும். நிலப்பாகல் என்பது நிலத்தில் கொடி போல் படர்ந்து காய்க்கும் தன்மையுடையது. நிலப்பாகை nila-p-pāgai, பெ. (n.) நிலப் பாகல் (சங்.அக.) பார்க்க,; see nila-p-pāgal. [நிலம் + பாகை. பாகல் பாகை.] நிலப்பாசம் nila-p-pasam, பெ. (n.) நாகப் பாம்பு; cobra. (சா.அக.). நிலப்பாலை1 nila-p-pālai, பெ. (n) சிறுமரவகை (L); round leaved discous feather foil. [நிலம் + பாலை.]