பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 5, PART 2, நி,நீ.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நியப்பொட்டு நிலப்பொட்டு nila-p-pottu, பெ. (n) காளான்வகை (வின்.); a kind of medicinal fungus. (நிலம் + பொட்டு.] நிலமாகிய தரையில் பொட்டு போன்றிருப்பது. நிலப்போக்கு nila-p-pökku, பெ. (n) மண்ணின் தன்மை; quality of soil. (நிலம் + போக்கு.] நிலப்போங்கு s-p-pdigu பெ. (n) நிலத்தினியல்பு அல்லது தன்மை (வின்.); qual- ity of soil. [நிலம் + போங்கு.] நில் → நிலம் போக்கு போங்கு. நிலபுலம் nila-pulam, பெ. (n.) புன்செய், நன்செய் நிலம்; (property in) dry and wet lands. அவருக்கு நிறைய நிலபுலங்கள் இருக்கின்றன. (உ.வ.) [நிலம் + புலம்.] நில் நிலம் = நீர்போல் ஓடாது நிலைத்து நிற்கும் பூதம். புல் புலம்= பொருந்தியிருக்கும் நிலம். நிலபுலன் nila-pulan, பெ. (n.) நிலபுலம் பார்க்க; see nila-bulam. [நிலபுலம் நிலபுலன்.) நிலம்' nilam, பெ. (n.) 1. நீர் போல் 'இயங்காது ஒரேயிடத்தில் நிலையாக நிற்கும் பூதவகை; the earth, "நிலந்தீ நீர்வளி விசும்போ டைந்தும்” 59 நிலம்' (தொல்.மரபு.90.) 2. மண்; ground, land. "நிலத்தியல்பா னீர்திரிந் தற்றாகு மாந்தர்க் கினத்தியல்ப தாகும் அறிவு' (குறள்,452.). 'நிலத்தில் எழுந்த பூண்டு நிலத்தில் மடியவேண்டும்' (பழ.). 3. நிலத்தின் புறணி; soil. 'நிலந்தினக் கிடந்தன நிதி' (சீவக.1471.). 4. தரை; ground; நிலத்திற் கிடந்து வணங்கினான். (உ.வ.). 5. நன்செய் அல்லது புன்செய் ஆகிய வயல்; விளை நிலப் பரப்பு; field. நிலத்திற்குத்தகுந்த கனியும் குலத்திற்குத் தகுந்த குணமும். (பழ.). 6. நீரும் நிலமுஞ் சேர்ந்த ஞாலம்; the world. 'நிலந்திறம் பெயருங்காலையும்' (பதிற்றுப்.63:6.); "நிலம் பெயரினும் நின் சொல் பெயரல்" (புறநா.3.). 7. இடம்; place. "நிலப்பெயர்” (தொல். சொல்.167.). 8. நிலத்திலுள்ளார்; inhabitants of the world. “நிலம் வீசும்” (சீவக. 267.). 9. நிலமகள்; Goddess of earth. "இலமென் றசைஇ இருப்பாரைக் காணின் நிலமென்னும் நல்லாள் நகும்” (குறள்,1040.). 10. நாடு; re- gion. 'செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணி' (தொல்.சொல்.398). 11. நிலத்துண்டு; piece of land. நிலந்தரு திருவிற் பாண்டிய னவையத்து (தொல்.சிறப்புப்பா.). 12. யாப்பின் நிலைக்களம்; prosody point "பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே அங்கதம் முதுசொலோ டவ்வேழ் நிலத்தும்” (தொல்.பொருள்.320). 13. செய்யுளடி யெழுத்து; poetical syllable, "மெய்வகை யமைந்த பதினேழ் நிலத்தும்” (தொல். பொருள்.290).14. எழுத்தசை சீரென்னும் இசைப்பாட்டிடம்; source of musical sound, as letters, syllables and metrical feet. 'நிலங்கலங் கண்ட நிகழக் காட்டும் (மணிமே. 28:42.). 15. வரிசை; rank. 'கற்றுணர்ந்தோரைத் தலைநிலத்து வைக்கப்படும்' (நாலடி,133.). 16. புலனம் (விஷயம்); object of sense. 'அவதார ரகசியம் ஒருவர்க்கும் அறிய நிலமல்ல' (ஈடு.1:3:11). 17. மேன்மாடம் அல்லது மேல்தளம்; storey or upper floor of a building. 'பல நிலமாக அகத்தை எடுக்கும்' (ஈடு. 4.9.3).