பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

செந்தமிழ் பெட்டகம்

பட்டுவந்த மொழியாகும் இந்தியாவில் முதன் முதலாக நமக்குத் தெரியும் எழுத்துக் கரோஷ்டி (த க) என்பது இது வடமேற்கு எல்லைப்புறத்தில் மட்டும் சில நூற்றாண்டுகள் உலவிவந்தது பின் பிராமி என்ற எழுத்து இந்தியா முழுதும் பரவிற்று ஆராய்ச்சியாளர் இது செமிட்டிக் மக்களிடமிருந்து வணிகர்மூலம் இந்தியாவிற்கு கி மு 800-ல் வந்திருக்கலாம் என்று சொல்லுகிறார்கள் ஆனால், சிலர் இது ஹரப்பா லிபியிலிருந்தும் வந்திருக்கக்கூடும் என்று கருதுகின்றனர் கரோஷ்டி வலமிடமாக எழுதப்படுவது; பிராமி இடம் வலமாக எழுதப்படுவது பிராமி சமஸ்கிருதமொழிக்குள்ள ஒலிகளுக்குத் தக்க மாறுபாடுகளுடன் கிமு 500இலேயே சீர்திருத்தப்பட்டது அசோகரின் கல்வெட்டுக்களே முதன்முதலில் நமக்குக் கிடைத்திருக்கும் பிராமி எழுத்துக்கள் இந்த பிராமி லிபியே இந்தியா முழுதும் பரவித் தற்போது சமஸ்கிருதம், இந்தி முதலியன எழுதப்படும் தேவநாகரிக்கு மட்டுமல்லாமல், மற்ற எல்லா இந்திய மொழிகளுக்கும் ஆங்காங்குச் சில மாறுதல்களுடன் எடுத்துக்கொள்ளப்பட்டது; இதிலிருந்தே தென்-ஆசிய லிபிகளும் வந்தன

இம்மொழியிலும் பிற இந்திய மொழியிலும் பண்டை இலக்கியம் முதலில் பூர்ஜமர இலை, பட்டை, பனையோலை இவற்றிலும், பின்காகிதத்திலும் எழுதி வைக்கப்பட்டது இக்காரணத்தால் பல அருமையான பழைய நூல்கள் மறைந்து போயின நூல் நிலையங்களில் பதினாயிரக்கணக்கான சமஸ்கிருதச் சுவடிகள் இன்று குவிந்திருந்தாலும், இவை அனைத்தும் முன்னிருந்து நசித்துப் போன இலக்கியத்தின் ஒரு பகுதியே என்பதை நாம் மறக்கக் கூடாது மனப்பாடத்தையே முக்கியமாகக் கருதிய இந்த சமஸ்கிருத இலக்கியத்தில் மனப்பாடத்திற்கு உதவும்படி அந்தந்தத் துறைகளில் சுருக்கமான சொற்களால் அதாவது சுட்டிக் காட்டும் ஒரு சொல் இரு சொற்களால் ஆன சூத்திரங்கள் செய்து, அவற்றின் மூலம்