பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

99

இலக்கியத்தைக் காத்து வந்தனர் பாணினி தன் இலக்கணம் முழுவதையும் சுமார் 4,000 சூத்திரங்களில் அடக்கினார் இது போலவே நிகண்டு, விஞ்ஞானம் முதலிய துறைகளில் மனப்பாடத்திற்கு உதவும்படி நூல்கள் செய்யுள் நடையில் எழுதப்பட்டன

சமஸ்கிருத இலக்கியமானது காலத்தில் பழமையையும் அளவில் பெரும்பரப்பையும் கொண்டது; நாலாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து வளர்ந்து வந்தது ரிக்வேதப் பாக்கள் கி மு 2500-ல் தோன்றின என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர் உலக இலக்கியங்களுள் அழகிய கவிதையோடும் சீரிய கருத்துடனும், அளவிலும் அதிகமாக இன்று நமக்கு வந்துள்ளவற்றில் ரிக்வேதமே மிகப்பழமை வாய்ந்த இலக்கியமாகும் ரிக்வேதம் சந்தத்தில் அமைந்து, தெய்வத்தை வேண்டும் செய்யுட்களால் ஆனது ரிக்வேத சந்தங்களில் முக்கியமானவை ஏழு அட்சரக்கணக்கினாலும் சிற்சில அட்சரங்களின் குறில்-நெடில் நெறியாலும் இச்சந்தங்கள் அமைந்திருக்கின்றன.

வேத ஆசிரியர்கள் கவிகள் சந்தத்தின் ஓசையினாலும் மற்றக் காப்பிய இயல்புகளாலும் அவர்கள் கையாண்டமொழி செய்யுள் நடையில் சிலமாறுபாடுகளுடன் தோன்றியது உவமையிலும் இயற்கை வருணனையிலும் இக்கவிகள் திறமை வாய்ந்திருந்தனர் ரிக்வேதப்பாக்களை அவர் சாம வேதத்தில் இசையுடன் இசைத்துப் பாடினர் இசையில் இப்பாக்களின் சொல்லமைப்பு என்னவென்று புலனாகாதபடி பலவகையில் மாறுதல்களை அடைந்தது இப்படிப்பட்ட பழைய வேதச் செய்யுள்கள் இசையான சாம வேதத்தை விலக்கி, மூன்று வேதத் தொகைகளாகச் (சங்கிதை) சேகரிக்கப்பட்டன; இவை ரிக், யஜுஸ், அதர்வம் என்பன யஜுஸ் என்பதில் ஒரு கிளை வேள்வி நடத்துவதுடன் நெருங்கிய தொடர்பு கொண்டதால்,