பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

101

உபாக்கியானம் என்ற இலக்கியத்தைப் பாதுகாப்பதற்கான தனி மரபினரும் இருந்தனர்; இவருக்குச் சூதர், மாகதர் என்று பெயர் இவ்வழிவந்தனவே மகாபாரத, இராமாயண இதிகாசங்களும் மற்றும் நள தமயந்தி, சாவித்திரி-சத்தியவான், சிபி முதலிய உபாக்கியானங்களும் வாயு, மத்ஸ்யம் முதலிய புராணக்கதைகளும் இக்கதைகளிலிருந்தும் இதிகாசங்களிலிருந்தும் வளர்ந்தனவே சமஸ்கிருதத்தின் காப்பியங்கள்

மேலே சொன்ன மத சம்பந்தமான சூத்திரங்களுக்கு விளக்கமாக எழுந்த பாடியம் என்ற உரைகளே இதற்கப்புறம் வளர்ந்த இலக்கியம்

இக்காலத்திலேயே அரசர் செய்யும் அலுவல்களைப் பதிவு செய்யவும், அவர் விடுக்கும் செய்திகளுக்கு விளம்பரமாகவும் கல்வெட்டு இலக்கியம் எழுந்தது என்பது அசோகரின் கல்வெட்டுக்களிலிருந்து தெரிகிறது

மேற்சொன்ன சரித்திரங்களையும், மத சம்பந்தமான கதைகளையும்போல் மக்களைப் பற்றிய கதைகளும் பொதுமக்கள் வாழ்க்கையையும், நடத்தை, ஆட்சி முதலியவற்றையும் விளக்கும் நீதிக் கதைகளும் செய்யுள்-உரை இரண்டும் கலந்த நடையில் வளர்ந்தன இந்த வழி வந்தனவே பஞ்சதந்திரக்கதைகள் உலகு முழுதும் பரவிய கதை-இலக்கியத்திற்குத் தாயகம் இந்தியாவேயாகும்

தெய்வங்கள், அரசர், சமூகத்திலுள்ள பெருமக்கள் இவர்களுடைய வாழ்க்கையையும் செயல்களையும் இதிகாச-புராணங்களில் உள்ளவற்றைவிட அதிகமான கவிப்பண்புகள் நிறையக் கவிஞர்கள் பாடத் தொடங்கினர் இதிலிருந்து மகாகாப்பிய இலக்கியம் வளர்ந்தது போல், வேள்வியிலும் பொதுமக்களிடமும் ஒருவர் செய்வது போலும் முன் நடந்ததுபோலும் மறுபடியும் நடத்துவதும் செய்து காட்டுவதுமான மனித இயல்பின் விளைவாக நாடக இலக்கியம் கிளம்பிற்று