பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

செந்தமிழ் பெட்டகம்

முன் வேதத்தைக் காப்பாற்ற இலக்கணம், நிருத்தம் என்ற பொருள் விளக்கும் துறைகள் இரண்டும் சொல்லப்பட்டன. இவற்றைப்போல வேள்வி செய்ய ஓமம் செய்யும் குண்டம் முதலியன கட்டுவதற்கும், சரியான பருவம், நாள், நட்சத்திரம் தெரிந்து கொள்வதற்குமாக விஞ்ஞானத்துறைகளான கணக்கு, சிற்பம், வானவியல் முதலியன வளர்க்கப்பட்டன. உலக அனைத்தும் பரவியுள்ள எண்கள், இந்தியாவிலிருந்தே அரபுநாட்டு வழியாகப் பரவிற்று எண்களுக்குள்ள ஸ்தானம், அதன் மூலமாக ஒன்று, பத்து, ஆயிரம், தசமபின்னம் (Decimal) என்ற கணக்கு நுட்பங்கள் இந்தியாவிலிருந்தே பரவியவை பண்டைக் கிரேக்கக் கணக்கு நூல்களும் சமஸ்கிருதக் கணக்கு நூல்களைத் தழுவியுள்ளன

மத ஒழுக்கத்திலும் தெய்வ வழிபாட்டிலும் ஈடுபடுவதற்காக, உடல்நிலை, நோயின்மை, நீண்ட வாழ்க்கை முதலிய சரீர சாதனங்களைப் பெற ஆயுர்வேதம் என்ற மருத்துவமும் பண்டைய சமஸ்கிருதத்தில் வளர்க்கப்பட்டு இன்றும் வழக்கில் இருந்து வருகிறது கிரேக்க மொழியிலுள்ள சில பழைய மருத்துவ நூல்கள் சமஸ்கிருதத்திலிருந்து எடுத்து எழுதியவை என்று ஆராய்ச்சியாளர் காண்பித்திருக்கின்றனர் இப்படியே இராணுவம், அரசியல் துறைகளிலும் நூல்கள் எழுந்தன; கெளடில்யரின் அர்த்தசாஸ்திரம் பண்டை அரசியல் நூல்களுக்கெல்லாம் சிகரமானது (கி மு 4ஆம் நூ) அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு துறைகளிலும் சூத்திரம், உரை, செய்யுள் விளக்க நூல்கள் வளர்ந்தன ஆனதுபற்றித் தற்கால விஞ்ஞானக் கலைச் சொற்களுக்குத் தக்க இந்தியச் சொற்களைத் தருவதற்கான நூல்கள் சமஸ்கிருதத்தில் இருக்கின்றன

நற்கலைகள், வீட்டுக்கலைகள், சிறுதொழில்கள் இவற்றைப் பொழுதுபோக்கிற்கும் இன்பத்திற்கும்