பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

செந்தமிழ் பெட்டகம்

செய்யும் ஆற்றலாலும் பரந்த பொருள்களைச் சுருக்கிச் சீரிய எண்ணங்களை நன்கு பதியும்படி சில வார்த்தைகளில் சொல்வது இந்த மொழியிலுள்ள சிறப்புகளில் ஒன்றாகும் இதை நீதி நூல்களிலும் நன்மொழிகளிலும் (சுபாஷிதங்கள்) காணலாம் சிலேடை வசதியால் ஒரே காவியத்தில் இரண்டு மூன்று கதைகளைச் சேர்த்து அமைப்பது முதலிய சித்திரக்கவிகளும், வேறு பற்பலவகை அணிக்கவிகளும் பிற்காலக்கவிகள் தமக்கு இம்மொழி முழுதும் வசியமாயிருப்பதைக் காட்ட எழுதினர் காப்பியத்திலேயே இலக்கணம் முதலிய சாஸ்திரங்களை விளக்குவது, சமஸ்கிருதமே பிராகிருதம் போல் காதில் விழுவது முதலிய வேலைப்பாடுகளையும் காப்பியத்துறையில் கையாண்டனர்

சமஸ்கிருத மொழிக்கு உயிர்ச் சத்தாயிருப்பது மூல வினைச்சொற்களான தாதுக்கள் இவற்றுள் சமஸ்கிருதத்தில் சுமார் 2,000ம் இருப்பதால், தக்க விகுதிகளைச் சேர்த்துச் சொல்லாக்கும் வசதி சமஸ்கிருதத்திற்கு அளவில்லாமல் ஏற்படுகிறது இந்த வசதியால் நவீனமாயினவும், பிற நாட்டினவுமான கருத்துகளையும் பொருள்களையும் பொருத்தமான சொற்களால் சொல்லக்கூடிய திறமை இம்மொழிக்கு இருக்கிறது

கவிதையில் பாத்திரங்களுடனும் வருணனையுடனும் இயற்கையை இணைத்து, மனித உள்ளத்தையும் இயற்கையையும் ஒன்றுபடுத்துவது சமஸ்கிருதக் காப்பியங்களுக்கும் நாடகங்களுக்கும் உள்ள சிறப்புக்களில் முக்கியமாகச் சொல்ல வேண்டியதாகும் இதைக் காளிதாசனின் சாகுந்தலம், மேகதூதம் போன்ற கற்பனைகளில் காணலாம் கிரேக்கநாடகங்களுக்கும் எலிசபெத் காலத்திய நாடகங்களுக்கும் நடுவேயுள்ள நூற்றாண்டுகளில் உலக இலக்கியத்தில் சிறப்புற்ற நாடகக் கலை ஒன்று இருந்து வந்ததா? என்றால், அதற்கு