பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

105

விடையாக இந்தியாவில் இருந்து வந்த சமஸ்கிருத நாடகம் ஒன்றே என்று கீத் போன்ற மேனாட்டு ஆராய்ச்சியாளர் சொல்லுகின்றனர்

சமஸ்கிருத இலக்கியவளர்ச்சியைக் கீழ்க்கண்டவாறு சுருக்கமாகக் காட்டலாம் இலக்கியத்தை, சிரவியம் (கேட்பது), திருசியம் (பார்ப்பது) என இரு பெரும் பிரிவுகளுக்குட்படுத்தலாம்

சிரவியம் செய்யுள், உரைநடை, சம்பு என்று மூன்று வகைப்படும்

செய்யுள் மகாகாவியம், கண்ட காவியம் எனப் பிரியும்

மகா காவியம் : 2-ம் காளிதாசனின் இரகுவம்சம் : கல்ஹணனின் ராஜதரங்கிணி (வரலாற்றுக் காப்பியம் ); சோமதேவனின் கதா சரித் சாகரம் (கதை)

கண்ட காவியம் :

ஒரு செய்யுள் முத்தகம் : இரு செய்யுள் யுக்மகம் : குளகம் முதல் சங்காதம் என்ற பல செய்யுட் தொடர் கொண்ட சிறு காப்பியங்கள் முத்தகத்தொகை-அமருகர், பர்த்ருஹரி முதலியோர் எழுதிய காதல், நீதி முதலிய பொருள்களைக் கொண்ட சதகங்கள் ; சிறு காப்பியமாக ஒரே பொருளில் அமைந்ததற்கு உ-ம் காளிதாசனின் மேகதூதம், பார்க்க : கண்ட காவியம்

உரைநடை கதை, ஆக்கியாயிகை என இருவகைப்படும்.

கதை: உ-ம் காதம்பரி, தசகுமார சரிதம்.
ஆக்கியாயிகை : உ-ம் ஹர்ஷ சரிதம்

சம்பு என்பது செய்யுளும் உரைநடையும் கலந்தது உ-ம். போஜனின் இராமாயண சம்பு, பஞ்சதந்திரம் (பார்க்க : சம்பு காவியம்)