பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

செந்தமிழ் பெட்டகம்

திருசியம் நாட்டியம் (கதை தழுவி வருவது), நிருத்தியம் அபிநயம்), நிருத்தம் (வெறும் கூத்து) என மூவகைப்படும்

நாட்டியத்தை ரூபகம், உபரூபகம் என இரண்டு வகையாகப் பிரிக்கலாம்

ரூபகம் இதில் முக்கிய வகைகள் நாடகம், பிரகரணம், பாணம், பிரஹசனம், நாடிகை

உபரூபகம் : இதில் சுமார் இருபது வகைகள் உண்டு இவை இசையையும் கூத்தையும் தழுவியவை

கட்டுரைகள் : சமஸ்கிருதம்; கத்திய காவியம்; கண்டகாவியம்; சம்பு காவியம்; மகா காவியம் ; அர்த்த சாஸ்திரம்- கெளடில்யர் அர்த்த சாஸ்திரம், ஆகமம்; இதிகாசம், இராமாயம்; வால்மீகி இராமாயணம்; உபநிடதம்; காளிதாசன், கீதை, சங்கிதை, சுக்கிர நீதி : தரிசனங்கள்; தர்ம சாஸ்திரம்; நீதி நூல்கள்; பாரதம்; பாசன், பிராமணங்கள்; புராணம்; வியாகரண சாஸ்திரம்; வேதம் முதலியன முக்கியமான நூல்களுக்கும், ஆசிரியர், முனிவர், அறிஞர்களுக்கும் தனிக்கட்டுரைகள் உண்டு கணிதம், மருத்துவம் முதலான பல சாஸ்திரங்களிலும் நாடகம், சிற்பம் முதலிய கலைகளிலும் சமஸ்கிருத நூல்களின் கருத்துக்களுக்குத் தனிக் கட்டுரைகள் உண்டு

இந்தோ-ஈரானியத்தின் முக்கியப் பிரிவானதும், இந்தோ-ஐரோப்பியத்தின் கிழக்கு எல்லையில் உள்ளதுமான சமஸ்கிருதத்தின் தனிப்பட்ட குடும்பமும், வரலாறும் : வேதமொழி : இது ஆங்காங்கு கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்குத் திசைகளில் மக்கள் பேச்சு வழக்கில் பல வேற்றுமைகள் கொண்டிருந்தது பல்வேறு பட்டமக்கள் பேசிய இந்த மொழியை அறிஞர் இலக்கணத்தால் சீர்திருத்தி, இலக்கியத்தில் ஒரே மாதிரியாகக் கையாண்டனர் அது காப்பிய சமஸ்கிருதம்