பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

107

எனப்படும் இது பேச்சுவழக்குக்களோடு நாற்றிசைப் பேச்சுமொழிகளிலிருந்து வளர்ந்து பாலி, அர்த்த-மாகதி, செளசேனி, மாஹாரஷ்ட்ரி, கொடும் சமஸ்கிருதமான பைசாசி முதலில் பிராகிருதங்களாக மாறிற்று. இவற்றுள் பாலியை பெளத்தர் கையாண்டனர். அர்த்தமாககதியை ஜைனர் கையாண்டனர் செளரேசேனி சமஸ்கிருத நாடகங்களில் கீழ்நிலைப் பாத்திரங்களால் கையாளப்பட்டது; மஹாராஷ்ட்ரி காப்பியங்களில் கையாளப் பட்டது; பைசாசி மக்களுக்கிடையே வழங்கும் கதை இலக்கியத்தில் கையாளப் பட்டது மேற்சொன்ன இலக்கண வரையறைக்குட் பட்ட காப்பிய சமஸ்கிருதத்திற்கும் மக்களுக்கிடையே வழங்கும் பேச்சு மொழிக்கும் நடுவில் சிற்சில இலக்கணக் கட்டுப்பாடுகளிலிருந்து வழுவியதும், அரைகுறை இலக்கணமும், கொச்சைப் பேச்சின் சில அம்சங்கள் குறுக்கிடுவதுமான மொழி ஒன்றும் பொது இலக்கியத்தில் கையாளப்பட்டு வந்தது, இதைச் சில ஆராய்ச்சியாளர் காதா சமஸ்கிருதம் (காதைகளுக்குவுதம் மொழி) என்றும், இது இதிகாச புராணங்களில் காணப்படுவதால் இதிகாச சமஸ்கிருதம் என்றும், பெளத்த நூல்களில் காணப்படுவதால் கலப்பு சமஸ்கிருதம் என்றும் கூறுவர்

பல திறப்பட்ட இலக்கியப்பிழைகள் காணும் நடுத்தரமான இந்த சமஸ்கிருதமே வெகுகாலம் நடைமுறையில் மக்களால் பேசப்பட்ட மொழியாக இருந்து வந்ததென்பதற்குச் சான்றாகும் சமஸ்கிருதம் பேச்சில் இருந்த மொழி என்பதற்குப், பாணினி இலக்கணத்தில் பேச்சிற்கென்று தரப்படும் குத்திரங்கள், பதஞ்சலி மகா பாஷியத்தில் தேர் ஓட்டுபவனும் இதைப் பேசுவதாகச் சொல்லி மேற்கோள் கொடுத்திருப்பது, இது பேசப்பட்டு வந்ததை வற்புறுத்தும் ஆனால் லக்கணத்தில் வெகுவாக கட்டுண்டபிறகு, இது ஓரளவு பேச்சு வழக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி, இலக்கியத்திற்கும், புலவர் சொற் பொழிவுகட்கும் கையாளப்பட்டதாய் மாறிற்று எனலாம்