பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

செந்தமிழ் பெட்டகம்

இலக்கணத்தில் இந்த சமஸ்கிருதம் கடைப்பிடிக்கப்பட்டதின் காரணத்தாலேதான் இதற்கு சமஸ்கிருதம், பரிசுத்தம் செய்யப்பட்ட மொழி என்ற பெயர் ஏற்பட்டது பேசப்படும் பிராகிருத மொழிகளில் இலக்கியங்கள் வளர்ந்த போதும் சமஸ்கிருதத்தின் ஆட்சி குன்றவில்லை பிராகிருத இலக்கியம், இலக்கணம் இரண்டும் சமஸ்கிருத முறையையே தழுவி நின்றன பண்பாட்டிலும் உயர் துறைகளிலும் சமஸ்கிருதமே ஆளப்பட்டு வந்தது கல்வெட்டுக்களிலும் இதையே கையாண்டனர் முதலில் இதைக்கைவிட்ட பெளத்தரும் ஜைனரும் இதனிடமே திரும்ப வரும்படி ஆயிற்று மேலும் மதம், பண்பாடு, கலாச்சாரம் இவற்றின் மூலம் மத்திய - ஆசியா, சீனம், தென்கிழக்கு ஆசியா முழுதும் சமஸ்கிருதம் பரவிற்று கம்போடியா, ஜாவா, பாலி முதலிய நாடுகளில் கணக்கற்ற சமஸ்கிருதக் கல்வெட்டுக்கள் அகப்பட்டிருக்கின்றன

அதிகமாக இலக்கியத்தில் கவிகளால் கையாளப் பட்ட பிராகிருத மொழிகளும் நாளடைவில் இலக்கிய மொழிகளாகி, நடைமுதலிலிருந்து விலகத் தொடங்கியதால் இவற்றிற்கு அடுத்தபடியாகப் பேசப்படும் முறையில் அபப்ரம்சங்கள் என்ற மக்கள் மொழிகள் எழுந்தன அபப்ரம்சங்களிலும் காப்பியங்கள் முதலியன எழுந்த, அவற்றையும் இலக்கண வரையறைக்குட் கொண்டு வந்தன.

பிறகு, இக்காலத்தில் பேசப்படும் வட இந்திய மொழிகளுக்கு மூலமாயிருந்த புதிய இந்தோ-ஆசிய மொழி என்ற பிற்கால மக்கள் மொழி எழுந்தது

பழம் மஹாராஷ்ட்ரி பிராகிருதத் தொடர்பில் எழுந்தவை தற்கால மராட்டி, கொங்கணி, கோவா மொழிகள், கிழக்கே வழங்கிய மாகதி பிராகிருதத் தொடர்பில் வந்தவை வங்காளி, அஸ்ஸாம் மொழி, ஒரியா, பீகாரி, மைதிலி, போஜ்புரி, நடுவே இருந்த