பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

செந்தமிழ் பெட்டகம்

இரட்டித்து 'ஜனாஸ': என்றும் வரும்; பின் சமஸ்கிருதத்தில் இது சொல்லுடன் சேர்ந்து வரும்

வேதமொழியில் சொற்களுக்கு ஏற்றம் (உதாத்தம்), இறக்கம் (அனுதாத்தம்), இரண்டிற்கும் பொதுவாக (ஸ்வரிதம்) என்ற சுரம் இருந்தது இந்த சுரத்தால் பொருளும் மாறுபடும் இது பின் சமஸ்கிருதத்தில் முற்றும் மறைந்து போயிற்று வேதமொழியின் மிகப் பழைய நிலை ரிக்வேதப் பாக்களிலும் ஓரளவு அதர்வ வேதப்பாக்களிலும் காணப்படுகின்றது ரிக்வேத சமஸ்கிருதத்தைவிடப் பிற்பட்டது. யஜூர் வேத சமஸ்கிருதம், மொத்தமாகப் பாக்களாக வரும் சங்கிதைப் பகுதிகள் பழமை வாய்ந்தவை, பாக்களின் கருத்தையும் வினியோகத்தையும் விளக்கும் வேதாந்தங்களான உபநிடதங்கள் இவற்றின் மொழி பிற்பட்டது. ஆனாலும் இவற்றில் பழைய ரிக்வேத சமஸ்கிருத சின்னங்கள் இருப்பதும், இவை பிற்காலக் காப்பிய சமஸ்கிருதத்திற்கும் முற்பட்ட இலக்கண நடைகளைத் தழுவியிருப்பதும் நன்கு புலனாகும்

செய்யுள் நடையில் ரிக்வேத சங்கிதை இருப்பதால், யாப்பிலக்கணத்தால் மொழியில் சில மாறுபாடுகள் காணப்படும் உரைநடையிலிருக்கும் பிராமணப்பகுதியிலோ இம் மாறுபாட்டிற்குக் காரணம் இல்லாததால், பிராமண மொழி மிகப் பழமையான சில இலக்கணவுறுப்புக்களை விடாமல் பாதுகாத்து வருகிறது.

முதன்முதலில் சமஸ்கிருத்தை மேனாட்டு ஆராய்ச்சியாளர் படித்ததிலிருந்து நவீன மொழியிலக்கணத்துறை ஏற்பட்டதைச் சொன்னோம் மூலமொழி, மற்றும் உறவுமொழிகள் இவற்றின் இலக்கணங்களை ஆராய சமஸ்கிருத இலக்கணமும் இம்மொழி பாதுகாத்து வைத்துவரும் ஒலிகள், சொல்லுருவங்கள், இலக்கண மரபுகள் ஆகியவையும்