பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

செந்தமிழ் பெட்டகம்

(a) h, h (k), h (p)

வேதத்தில் தமிழ் 'ள' விற்கொப்பான தலையொலியான லகாரமும் அதே மூச்சுடன் ‘ள்ஹய (1h) உம் வருகின்றன மொழியில் ஒலிக்கப்படும் ஒவ்வொரு ஒலிக்கும் ஓரெழுத்து இருக்கிறது; ஒரே ஒலி, சொல்லில் தான் வரும் இடத்தைக்குறித்துத் தன் தன்மையை மாற்றி உச்சரிக்கப்படுவதில்லை

இவ்வொலிகளுள் தலை-ஒலிகள் என்று கூறப்படும் ட-வர்க்கம் சமஸ்கிருதத்திற்குத் திராவிடத்திலிருந்து வந்திருக்கலாம் என்பரும் உண்டு ஆனால் திராவிடத்தைச் சேர்ந்த சவர மொழியில் இவை இல்லாததாலும், சில இந்தோ-ஆரியன் சொற்கள் என்று தீர்மானமாகத் தெரிகின்ற சொற்களில் ஒலிகள் தமக்குள்ளே ஏற்படும் மாறுபாடுகளால் இம் மாற்றம் ஏற்படுவது தெரிவதாலும், இந்தப் பிரச்சினையைத் தீர்ந்ததாய்ச் சொல்ல முடியாது

மொழிகள் ஒன்றோடொன்று கலப்பதால் பேச்சில் ஒன்றிற்கொன்று கொடுக்கல் வாங்கல் இல்லாமல் இருக்காது சமஸ்கிருதத்தில் முண்ட-திராவிட மொழிக் குடும்பங்களின் அமிசங்கள், சொற்கள் புகுந்திருக்கின்றன பிற்காலத்திலே பிராகிருத மொழிகளிலிருந்தும் தாய்மொழியில் சில அமிசங்கள் புகுந்தன. உ-ம். தாய் மொழியான சமஸ்கிருதம் - 'கோபேந்த்ர' ;- பிராகிருதம்-'கோவெந்த';- மறுபடியும் சமஸ்கிருதப்படுத்தப் பட்டால் 'கோவிந்த' என்று ஆகிறது

சமஸ்கிருத மொழியைப் பற்றிப் பேசுங்கால் இதை ஆதியிலிருந்து ஆராய்ந்து, இதற்கு நுட்பமான இலக்கண விதிகளை வகுத்தவரையும் இதன் இலக்கண நூல்களையும் பற்றிச் சொல்லவேண்டும் சமஸ்கிருதத்திலுள்ள மத சம்பந்தமான முதல்நூலான வேதத்தை எழுதாமல் வெகுகாலம் மனப்பாடமாகவே வைத்து, அதன் இலக்கணங்கள் கெடாமல் இருக்க வேண்டி,