பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

113

அதற்கென வேதமொழியை ஆராய்ந்து, அதன் அமிசங்களை நன்குணர வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஆனதுபற்றி ஒவ்வோரொலியின் தன்மையும் பிராதிசாக்கியம், சிக்ஷை என்ற நூல்களில் ஆராயப்பட்டது மொழியிலக்கணமான வியாகரண சாத்திரம் வேதத்தைப் பாதுகாக்கும் ஆறு அங்க வித்தைகளில் ஒன்றாக வளர்க்கப்பட்டது

மேற்சொன்ன சிக்ஷை, பிராதிசாக்கியங்கள், வியாகரணம் போல் நிருத்தம் என்ற துறையிலும் இலக்கணம் ஒருவாறு ஆராயப்பட்டது மொழியாராய்ச் சியில் வேத காலத்து ரிஷிகள் மிகவும் ஊக்கத்தைக் காட்டிப் பல நுண்ணிய விதிகளைக் கவனித்துக் கூறினர் சமஸ்கிருதத்தில் பண்டைக்காலத்தில் சுமார் 70 இலக்கண ஆசிரியர்கள் இருந்தனர் என்றால் மொழி ஆராய்ச்சியில் இருந்த ஈடுபாட்டை நாம் ஊகித்துக் கொள்ளலாம் கி மு 700-ல் நிருத்தம் எழுதிய யாஸ்கர் என்பவரே தமக்கு முன் பல இலக்கணவாசிரியர் இருந்ததைத் தெரிவிக்கிறார் கி மு 500-ல் இருந்த பாணினியும் தம் சூத்திரங்களில் பாரத்வாஜர், சாக்ரவர்மன், ஆபிசவி முதலியவர்களைச் சொல்லுகிறார் பாணினிக்கு முற்பட்ட காலத்தில், இந்திரன் பெயரால் வழங்கியதும், தொல்காப்பியனார் அறிந்திருந்ததாகச் சொல்லப்படுவதுமான ஐந்திரம் என்ற இலக்கணம் இருந்தது பின்னால் பாணினியைக் காத்தியாயனர், பதஞ்சலி, பர்த்ருஹரி முதலியோர் பின்பற்றி, விளக்கி, சமஸ்கிருத இலக்கியத்தை ஒழுங்குபட வளர்த்தனர் பாணினி வியாகரணம் கஷ்டமென இலகுவாகச் சமஸ்கிருதத்தைக் கற்கப் பழைய ஐந்திரத்தைத் தொடர்ந்து கெளமாரமும், மற்றும் சந்திரர், காசகிருத்ஸ் னர், ஆபிசலி, சாகடாயனர், ஜைனேந்திரர், ஸாரஸ்வதம் முதலிய இலக்கண மரபுகளும் தோன்றின

சமஸ்கிருதமொழி வேதநடையிலிருந்து மாறிக் காப்பிய சமஸ்கிருதமாய் வளர்ந்தபோது சில கவனிக்க

செ பெ- 8