பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

செந்தமிழ் பெட்டகம்

வேண்டிய வேற்றுமைகள் தோன்றின மேலே சொன்ன படி சொற்களுக்கு முன் சேர்க்கக்கூடிய ‘உபசர்க்கம்' தன் விருப்பப்படி தனியே வந்துகொண்டிருந்ததானது சொல்லுடன் ஒட்டிக்கொண்டது இது மொழியைத் தாராளமாகக் கையாளக்கூடிய எளிமையைக் கொஞ்சம் குறைத்தது பண்டைய சமஸ்கிருதத்தில் வினைச் சொற்களைப் பற்பல பொருள்படும் உருவங்களில் தாராளமாக ஆண்டு வந்தனர் பிற்கால சமஸ்கிருதத்திலே வினைச்சொல்லிலிருந்து வந்த எச்சங்களை (Participles) அதிகமாகக் கையாண்டனர். நேரே செய்வினை (Active voice) அதிகமாக இருந்தது மாறிச் செயப்பாட்டுவினைத் (Passive voice) தொடர்கள் அதிகரித்தன சமாசம் என்ற சொற்றொடர்கள் இந்தோ-ஐரோப்பியத்திற்கே பண்டைக்காலந்தொட்டே உண்டு; வேதத்தில் இரண்டு மொழிகள் அடங்கிய தொடர்கள் மலிந்து வருகின்றன ஆனால் நடுவேயுள்ள விகுதிகளை விட்டுச் சொற்களைச் சங்கிலியாகக் கோத்து, நீண்ட பெரிய தொடர் மொழியாக ஆள்வது உபநிடத காலத்திலேயே வந்துவிட்டது பிற்காலக் காப்பியங்களில் இத்தொடர் நடை வளர்ந்து உரைநடை இலக்கியத்தைத் தந்த பாண கவி முதலியோரால் அளவிற்குமேல் நீட்டப்பட்டது