பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

செந்தமிழ் பெட்டகம்

ஒலித்தொடராக அமையலாம் இங்கு வாக்கியம் முழுவதுமே ஒரே சொல்லாகிறது இந்தத் தன்மை அமெரிக்க இந்தியரின் மொழியில் காணப்படுகிறது இதை முழுதும் ஒன்றாகக்கூடும் சொற்கோவை நிலை வகை எனலாம் சிலமொழிகளில், உதாரணமாக பாஸ்க் மொழியிலே, சில பெயர்ச் சொற்களே இந்தச் சொற் கோவை முறையை அனுசரிக்கும்; மற்றப் பாகங்கள் பின்சொல்லப்போகும் ஒட்டு நிலை என்ற இலக்கணத்தையே கடைப்பிடிக்கும்

உலகமொழிகளுள் பெரும்பாலும் காணப்படுவது இந்த ஒட்டு நிலை முறையே ஒட்டு நிலை என்பதற்கச் சொற்கள் ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்வது என்று பொருள், சொற்கள் இவ்வாறு ஒட்டிக்கொள்வதில் பலவகைகளும் அளவுகளும் உண்டு தனித் தனிச் சொல் என்று தெரிந்துகொள்ளும் படி இருக்கும் தன்மையே ஒட்டு நிலையின் பண்பாகும் இந்தப் பண்பே இந் நிலையை அவ்வாறு எளிதில் பிரித்தறியக் கூடாத சொற்கோவை நிலை என்பதிலிருந்து வேற்றுமைப்படுத்தும் இந்த ஒட்டு நிலை முறையில் முன் விகுதி, பின் விகதி முதலிய வகைகள் உண்டு இவற்றிற்கு உதாரணம் துருக்கி, மெலனீசியன் முதலிய மொழிகள், திராவிட மொழிகளும் இவ்வகையைச் சாந்தவை

மூன்றாவது மாறுபாடு உட்பிணைப்பு நிலை அல்லது கலவை நிலை என்பது சொற்களுக்கிடையே பொருள்தொடர்பைக் குறிக்கும் பின்விகுதிகளாகச் சிறு ஒலித்தொகுதிகளைச் சேர்ப்பது இப்படிச் சொற்களில் ஏற்படும் மாறுபாட்டில், சொல்லினுள்ளிருக்கும் ஒலிகளிலேயே மாறுபாடு காண்பது, சொல்லுக்கப் பின் தனி விகுதி சேர்க்கையாக வருவது என்ற இரண்டு வகையுண்டு முதலாவதற்கு உட்சேர்க்கை என்றும், இரண்டாவதற்கு வெளிச்சேர்க்கை என்றும் பெயர் முதற் பிரிவிற்கு உதாரணம் செமிடிக்மொழிகள், இரண்டாவதற்கு உதராணம் இந்தோ-ஐரோப்பிய மொழிகள்