பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

117

இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் முதலில் ஒருயிர் வினைச் சொற்கள் (தாதுக்கள்) வழங்கி வந்தன இவற்றுடன் விகுதிகளைச் சேர்த்துச் சொற்கள் ஆக்கப்பட்டன. விகுதிகளும் தாதுக்களும் சேர்ந்து ஒரே சொல்லாயிருந்தன பின், நாளடைவில் சில விகுதிகள் தனித்துப் பிரிக்கப்பட்டு, முன்பின் சேரும் பெயர் முன்னிடைச்சொல், வினையடைகள் முதலியனவாய் ஏற்பட்டன. இந்த மொழிக் குடும்பத்தில் விகுதிகளை விலக்கிச் சொற்களை மட்டும் சேர்த்துத் தொகைமொழி அல்லது ‘ஸமாஸம்' செய்யும் இயல்பு பண்டைக் காலத்திருந்தே இருந்துவந்தது மூன்றாவதாக ஸ்வரத்துடன் இம்மொழிகள் பேசப்பட்டு வந்தன நான்காவதாக இந்த ஸ்வரம் காரணமாக உயிரெ ழுத்துகள் சொற்களின் மாறுபாட்டில் தாமும் மாறுபாடுகளை அடைந்து வந்தன. இதனை உயிரெழுத்துக்களின் படிக்கிரமம் அல்லது அப்லெளட்டு என்பார்கள் பாணினி இதன் வகைகளைக் குணம், விருத்தி என்ற நியமங்களில் விளக்கியிருக்கிறார் பொருளைப் பின்பற்றி ஏற்படும் விகுதிச் சேர்க்கைகள் மிகவும் விரிவடைந்தன. இதன் காரணமாகவே பின் விகுதிகளும் அவற்றைக்கொண்டு புதுச் சொற்களை ஆக்கும் வசதியும் சமஸ்கிருதத்தில் தனிச்சிறப்பாக ஏற்பட்டன

மேற்கூறிய மூல இலக்கணங்களைக் கொண்ட இந்தோ-ஐரோப்பியக் குடும்பத்திற்குட்பட்ட மொழிகள் மேற்கே அயர்லாந்திலிருந்து கிழக்கே இந்திய எல்லை வரையும் இருக்கின்றன. இம்மொழிக்குடும்பத்தை இந்தோ-ஜெர்மானியம் என்றும், இந்தோ-ஆரியன் என்றும் வழங்குவதுண்டு இதிலுட்பட்ட மொழிகள் 'கென்டும்' வகுப்பு, ‘சதம்' வகுப்பு என்ற இரு கூறுகளாகப் பண்டைக் காலத்திலேயே பிரிவுபட்டிருக்க வேண்டும் மூலமொழியிலிருந்த முன்னண்ண இனமான ‘சகாரம்’ ஒரு வகுப்பினர் வாயில் மிடற்றினமான