பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

119

இந்திரன், மித்திரன், நாஸத்யெள, வருணன் இவர்கள் சாட்சியாகப் பேசப்பட்டிருக்கின்றனர்

வட மெசப்பொட்டேமியாவில் ஆண்ட மிட்டானி அரசர் பெயர்களும் அகப்படுகின்றன. அவற்றிலும் சமஸ்கிருதத் தொடர்பு காணப்படுகிறது ஸூதர்ணன் (ஸூஅதர்மன்), பர்சசஸ்தர் (ப்ரசாஸ்தர்-ஆளுபவர்), ஸெளச்சதர் (ஸௌக்ஷத்ரர்) அர்த்ததாம, (ரிததாமா) முதலியன இங்கு காணப்படும் மற்றப் பெயர்கள் : வார்த்தாச்வன், வீர்யசூரன், க்ஷேம சூரன், ஸாதவாஜன் முதலியன குதிரைகளைப் பற்றிய நூல் ஒன்றும் இந்த வில்லைகளிலுள்ள சாசனங்களில் காணப்படும் இது குதிரைகளை அவற்றின் உடலில் காணப்படும் சுழிகளைக்கொண்டு, ஏக-வர்த்தனம், துவி-வர்த்தனம் என்று குறிக்கிறது இந்த மொழி சமஸ்கிருதத்திற்கு மிகவும் நெருங்கியதாக இருக்கிறது; இதிலுள்ள ஒலியமிசங்கள் வேதமொழியை ஒட்டியிருப்பதால் இந்தியாவிலிருந்து ஆசியா மைனருக்குச் சென்ற வேத கால ஆரியக் குடும்பங்களைச் சேர்ந்தவராக இந்த ஹிட்டைட்டு மிட்டானியர் இருக்கவேண்டும் என்று சில ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர்

மேலே சொன்ன வில்லை ஹிட்டைட்டு சாசனங்களின் காலம் கி மு 1500-1300 மக்கள் பரவப்பரவ மொழிகளில் சிறு சிறு வேற்றுமைகள் வளர்ந்து, மொழி பேதங்கள் ஆகின்றன. அவை நாளடைவில் கிளை மொழிகளாக மாறிப் பின்னர்த் தனித்தனி மொழிகளாக இலக்கண இலக்கியங்களுடன் வளர்ந்து விடுகின்றன இப்படியே மூல இந்தோ-ஐரோப்பியம் பல கிளை மொழிகளாகப் பிரிந்தது இப்படிப் பிரிந்த கிளை மொழிகளில் ஒன்றே சமஸ்கிருதம் இதற்கு மிகவும் நெருங்கியதும், கடைசியில் பிரிந்ததுமான மொழி ஈரானியர் (பார்சிகள்)களுடைய மத நூலான அவெஸ்தாவில் காணப்படும் ஈரானியன் அல்லது அவெஸ்தா